பொது செய்தி

இந்தியா

இந்தியா - சீனா இடையே 11வது சுற்று பேச்சு ..

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: கிழக்கு லடாக் எல்லையின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து, படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக, இந்திய - சீன படைகளுக்கு இடையே, நேற்று, 11வது சுற்று பேச்சு நடந்தது.கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், சீன படையினர் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை அடுத்து, இந்தியா - சீனா இடையே, கடந்த ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தது.இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்ததை

புதுடில்லி: கிழக்கு லடாக் எல்லையின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து, படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக, இந்திய - சீன படைகளுக்கு இடையே, நேற்று, 11வது சுற்று பேச்சு நடந்தது.latest tamil news


கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், சீன படையினர் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை அடுத்து, இந்தியா - சீனா இடையே, கடந்த ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தது.இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்ததை அடுத்து, இருநாடுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களையும், ஆயுதங்களையும் எல்லையில் குவித்தன.இதனால், இந்தியா - சீனா இடையே போர் மூளும் அபாயம் உருவானது. ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பல சுற்று பேச்சுக்கு பின், சுமுக தீர்வு எட்டப்பட்டது.

இரு தரப்பும், படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல், வடக்கு மற்றும் தெற்கு பாங்காங் சோ ஏரிக்கரை பகுதியில் குவிக்கப்பட்ட படையினரை, இரு தரப்பினரும் திரும்பப் பெற்றனர். இதற்கு இரு நாட்களுக்குப் பின், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான, 10வது சுற்று பேச்சு, 16 மணி நேரம் நடந்தது.


latest tamil news


இந்நிலையில், இந்திய - சீன அதிகாரிகள் மட்டத்திலான, 11வது சுற்று பேச்சு, கிழக்கு லடாக்கில் உள்ள சுஸ்ஹுல் பகுதியில் நேற்று காலை துங்கியது.இந்த சந்திப்பில், கிழக்கு லடாக்கின் இதர பகுதிகளான ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை திரும்பப் பெறும்படி, நம் தரப்பு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202116:34:24 IST Report Abuse
J.V. Iyer சீனா பேச்சு நடத்தினால் அவர்கள் கை பலவீனமாக உள்ளதுஎன்று அர்த்தம். சமயம் பார்த்து முதுகில் குத்துவார்கள். அவர்களை நம்பவேண்டாம். கம்யூனிஸ்ட்கள் எல்லோரும் இப்படித்தான்.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
10-ஏப்-202115:34:46 IST Report Abuse
srinivasan Since 1947, 100s of rounds of talks held between india-Pak. What's the progress? Is there any account on these talks? Every year, 1000s of cross border firing by pak. What country has done since 1947 except counting the bodies of martyrs? What's the role of congress since it ruled for many decades since then.
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) மாமல்லபுரத்திலே விருந்து வச்சி அனுப்புங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X