பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் இயக்குனர் எல்.ஆதிமூலத்திற்கு ‛கேம் சேஞ்சர்' விருது

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தின் போது ஆன்லைன் வாயிலாக சிறப்பாக செயல்பட்டதற்காக ‛மீடியாநியூஸ் பார் யு' நிறுவனம் மற்றும் ‛கலர்ஸ் டிவி' நிறுவனம் இரண்டும் இணைந்து, தினமலர்.காம் இயக்குனரும், 'தினமலர்' வணிகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு இயக்குனரும், 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளருமான, எல். ஆதிமூலத்திற்கு 2020ம் ஆண்டிற்கான கேம் சேஞ்சர் விருதினை
game changer award, L Athimoolam, Dinamalar, media news 4 u, colors tv,  dinamalar.com, கேம் சேஞ்சர் விருது, மீடியா நியூஸ் 4 யு, கலர்ஸ் டிவி, இயக்குனர், எல், ஆதிமூலம்,

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தின் போது ஆன்லைன் வாயிலாக சிறப்பாக செயல்பட்டதற்காக ‛மீடியாநியூஸ் பார் யு' நிறுவனம் மற்றும் ‛கலர்ஸ் டிவி' நிறுவனம் இரண்டும் இணைந்து, தினமலர்.காம் இயக்குனரும், 'தினமலர்' வணிகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு இயக்குனரும், 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளருமான, எல். ஆதிமூலத்திற்கு 2020ம் ஆண்டிற்கான கேம் சேஞ்சர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

2020ல் கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தால் அச்சுப் பதிப்பின் வாயிலாக பத்திரிக்கைகள் மக்களை முழுமையாக சென்றடைய முடியவில்லை. இந்த இக்கட்டான காலத்தில் பத்திரிக்கை தொழில் பாதிப்பு அடைந்தாலும், ஆன்லைன் வாயிலாக தினமலர்.காம் வாசகர்களை முழுமையாக கவர்ந்தது. குறிப்பாக ‛தினமலர் வழிகாட்டி' என்ற பகுதி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன் காரணமாக தினமலர்.காம் இணையதளத்தின் தினசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தது.

தினமலர்.காம் இணையதளத்தின் சிறப்பான சேவையை பாராட்டி ‛மீடியாநியூஸ் பார் யு' நிறுவனம் மற்றும் ‛கலர்ஸ் டிவி' இரண்டும் இணைந்து 2020 ஆண்டிற்கான ‛கேம் சேஞ்சர்' விருதினை அந்த இணையதளத்தின் இயக்குனர் மற்றும் 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலத்திற்கு வழங்கி கவுரவித்துள்ளது.

இது குறித்து தினமலர் இணையத்தின் வணிகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் இயக்குனரும், ஐ.என்.எஸ் தலைவராகவும் உள்ள எல். ஆதிமூலம் கூறியதாவது, ‛ கொரோனா தொற்றிலிருந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் நாம் சிறிது விடுபட்டாலும் இரண்டாவது அலை தற்போது மிரட்டி கொண்டுள்ளது. இருப்பினும் இதிலிருந்து நாம் விடுபடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தினமலர்.காம் கடந்த 1997 ல் துவங்கி சிறப்பான சேவையை ஆற்றி வருகிறது. மக்களை கவரும் வகையில் புதுமையான விஷயங்களை புகுத்தி வருகிறது.

கொரோனா காலத்தின் போது எங்களது பணியாளர்கள் 24 மணிநேரமும் வீட்டிலிருந்து பணியாற்றினர். செய்திகளை இணையத்தில் வெளியிடும் போது பிழைகள், தவறுகள் எதுவும் ஏற்படாத வண்ணம் எங்களது ஆசிரியர் குழு கண்காணித்து வந்தது.
பொது முடக்கத்தின் போதும் தினமலர்.காம் 110 சதவீத வளர்ச்சி அடைந்தது. தினமலர்.காம் தான் முதன் முதலாக மொபைல் பத்திரிக்கையை அறிமுகம் செய்தது. இதனால் எங்களது பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவது சிரமமாக தோன்றவில்லை.


latest tamil newsசமூக வலைதளங்களிலும் தினமலருக்கு சிறப்பான இடம் உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் முடங்கியிருந்த மக்கள் உற்சாகமாக கலந்து கொள்ளும் வகையில் பல்வேறு பரிசு போட்டிகள் எங்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் பெண்கள் மற்றும் மாணவரகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மீடியாநியூஸ் பார் யு நிறுவனம் மற்றும் கலர்ஸ் டிவி நிறுவனம், எனக்கு இந்த ஆண்டு ‛கேம் சேஞ்சர்' விருதினை வழங்கி உள்ளது. இந்த விருதினை தனிப்பட்ட முறையில் எனக்கும் எங்களது தினமலர் இணையதளத்திற்கும் வழங்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். மீடியாநியூஸ்.காம் நிறுவனம் மற்றும் கலர்ஸ் டிவி நிறுவனங்கள் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'. இவ்வாறு எல்.ஆதிமூலம் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஏப்-202108:32:28 IST Report Abuse
சம்பத் குமார் எல். ஆதிமூலம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தினமலர் குழுமத்திற்கு வாழ்த்துக்கள். நன்றி ஐயா
Rate this:
Cancel
10-ஏப்-202118:55:45 IST Report Abuse
ravi chandran Greetings Greetings Greetings Ji
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-ஏப்-202117:08:22 IST Report Abuse
ஆரூர் ரங் தகுதியானவர்க்கு விருது மிகவும் மகிழ்ச்சியான செய்தி
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஏப்-202102:20:22 IST Report Abuse
தல புராணம்இப்படி தகுதியானவர்களா பாத்து பரிசு கொடுக்கிறாய்ங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X