சிறுபான்மையினர் ஆதரவை கோரும் மம்தா: பிறரை யோசிக்கச் சொல்லும் அமித்ஷா

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோல்கட்டா: “சிறுபான்மையினரின் ஆதரவை மம்தா எதிர்பார்க்கிறார். மற்றவர்களின் ஆதரவை அவர் கோரவில்லை. அவர்கள் தற்போது முடிவெடுப்பார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.மேற்கு வங்க சட்டமன்றத்துக்கான 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு 31 சதவீதத்துக்கு அதிகமான வாக்கு வங்கி முஸ்லிம்களுக்கு உள்ளது. இடது முன்னணி 34 ஆண்டுகள் ஆட்சியில்

கோல்கட்டா: “சிறுபான்மையினரின் ஆதரவை மம்தா எதிர்பார்க்கிறார். மற்றவர்களின் ஆதரவை அவர் கோரவில்லை. அவர்கள் தற்போது முடிவெடுப்பார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.



latest tamil news



மேற்கு வங்க சட்டமன்றத்துக்கான 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு 31 சதவீதத்துக்கு அதிகமான வாக்கு வங்கி முஸ்லிம்களுக்கு உள்ளது. இடது முன்னணி 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்ததற்கும், மம்தா 2011-ல் வென்றதுக்கு பின்னணியில் இம்முக்கிய காரணி உண்டு. இந்த முறையும் அதே போன்று அவர்களின் வாக்குகள் ஆட்சியை தீர்மானிப்பதில் பங்காற்றும். முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்படும் எந்தவொரு பிரிவும் 90 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அது மம்தாவுக்கு சிக்கலாகும். இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணியில் இணைந்திருக்கும், அப்பாஸ் சித்திக்கின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி, திரிணாமுல் காங்., வாக்குகளை பிரிக்கக் கூடும். இது பா.ஜ.க.,வுக்கு சாதகமான நிலையை உண்டாக்கக் கூடும். இதனால் மம்தா பானர்ஜி முஸ்லிம்கள் தங்கள் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டார்.


latest tamil news



இது பற்றி கோல்கத்தாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமித்ஷா கூறியதாவது: மம்தா சிறுபான்மையினர் ஆதரவை கேட்கும் விதம், அவரது பலம் அவரிடம் இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. தேர்தலில் தோற்கிறோம் என அவர் அஞ்சுகிறார்.

சிறுபான்மையினரிடம் அவர் ஆதரவு கோருவதை மற்றவர்களும் கவனிக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அவர் மற்றவர்களின் ஆதரவை நாடவில்லை. தற்போது அவர்கள் முடிவெடுக்க வேண்டும். 91 தொகுதிகளுக்கு முடிவடைந்த 3 கட்ட தேர்தல்களில் 63 - 68 தொகுதிகளை பா.ஜ.க., வெல்லும் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
10-ஏப்-202116:01:31 IST Report Abuse
Raj மதம் தான் மூலதனம் மக்கள் அல்ல
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
10-ஏப்-202113:51:37 IST Report Abuse
konanki திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவும் என்னும் பொருள் பட பிரசாந்த் கிஷோர் பாண்டே பத்திரிகையாளர்களிடம் பேசும் ஆடியோ டேப் லீக். மேற்கு வங்கத்தில் இதனால் மம்தா தீதி கட்சிக்கு பாதிப்பு என தேசீய/மேற்கு வங்க ஊடகங்களில் பரபரப்பு செய்தி
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
10-ஏப்-202113:46:29 IST Report Abuse
konanki துணை ராணுவத்தினரை ஃகேரோ செய்யுங்கள். என்று பொது கூட்டத்தில் கர்ஜிக்கும் மம்தா தீதி தான் தமிழ் ஊடகங்கள் சேனல்கள் வெறியாளர்கள் குரல் அற்றவரின் குரலாக இருப்பவர்களின் தங்கத் தலைவி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X