10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்தில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்குத் தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

புதுடில்லி: தமிழகத்தில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்குத் தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த பிப்ரவரியில், சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு, கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்துக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


latest tamil news


இதற்கிடையில், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், அபிஷ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
11-ஏப்-202106:06:39 IST Report Abuse
venkates மக்கள் சதவிகிதம் தகுந்தாற் போல் இடஒதுக்கீடு அவசியமே ,,,போராடி ,உயிர் துறந்த தியாகிகளை ,,நினைவில் நிறுத்து ,,,தொடர்ந்து போராடு ,,முன்னேறு, எல்லோரையும் மதி ,,பண்பில் சிறந்தவனாகு
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
10-ஏப்-202117:34:31 IST Report Abuse
Rengaraj மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதன் பேரில் ஆரம்பிக்கப்பட்ட , இடஒதுக்கீடு சம்பந்தமான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. மாநிலங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வழக்கு அது. அரசியல் ஆதாயத்துக்காக நெடு நாட்களாக நடக்கும் வழக்கு முடிவுக்கு வரவில்லை.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
10-ஏப்-202113:58:13 IST Report Abuse
Anand இட ஒதுக்கீடு என்பதேயே தூக்கி குப்பையில் போடவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X