சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021
Share
சபரிமலை: சித்திரை விஷூ பூஜைகளுக்காக இன்று மாலை சபரிமலை நடை திறக்கிறது. ஏப்.,14 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் விஷூக்கனி தரிசனம் நடைபெறும்.மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறார். தொடர்ந்து ஊழியர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.அதன்பின் நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை

சபரிமலை: சித்திரை விஷூ பூஜைகளுக்காக இன்று மாலை சபரிமலை நடை திறக்கிறது. ஏப்.,14 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் விஷூக்கனி தரிசனம் நடைபெறும்.



latest tamil news



மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறார். தொடர்ந்து ஊழியர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.அதன்பின் நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிேஷகம் , வழக்கமான பூஜைகள் துவங்கும். ஏப்.,18 வரை அனைத்து நாட்களிலும் காலை முதல் இரவு வரை கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, களபாபிேஷகம், மாலையில் தீபாராதனை, இரவு படிபூஜை, அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும். ஏப்.,18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


latest tamil news


நாளை முதல் ஏப்.,18 வரை ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டீவ் சான்றிதழுடன் செல்ல வேண்டும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X