பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலுக்கு கட்டுப்பாடு... மதுக்கடைக்கு இல்லையா? இங்குதான் கொரோனா வேகமாக பரவுகிறது

Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
கோவை:தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடு விதிகளில், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்காதது ஏன், என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளதால், மக்கள் அதிகம் கூடும் கோவில் உள்ளிட்ட இடங்களில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஆனால், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளும்
கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, கட்டுப்பாடுகள், டாஸ்மாக்,  மதுபார்கள், மதுக்கடைகள்,


கோவை:தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடு விதிகளில், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்காதது ஏன், என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளதால், மக்கள் அதிகம் கூடும் கோவில் உள்ளிட்ட இடங்களில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஆனால், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்காதது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.கடந்த முறை ஊரடங்கு அமலில் இருந்த போது, பெரும்பாலான டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை. மாலை நேரங்களிலும், வார கடைசிகளிலும் கூட்டம் அலைமோதியது. அதே நிலை இப்போதும் தொடர்கிறது.


latest tamil news
மதுக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர், முக கவசம் அணிவதில்லை. பார்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.பார்களில் மது அருந்தி வெளியே வரும் வரை, மாஸ்க்கை கழற்றி விடுகின்றனர். ஒவ்வொருவரும் சுமார் ஒரு மணி நேரம் செலவிடுகின்றனர். இந்த ஒரு மணி நேரமும் கைகளை கழுவுவதில்லை.சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை. இந்த போதை விதிமீறல்களால், கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.இதனால், மதுபான கடைகளில் கொரோனா தடுப்பு விதிகள், முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணித்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில், மதுக்கடைகளை, குறிப்பாக பார்களை மூட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-ஏப்-202119:23:33 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இதுவரை மதுக்கடையால் வியாதி பரவவில்லை. ஆல்கஹால் வியாதியைப் பரப்பாது. இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் ஜடங்கள்.
Rate this:
Cancel
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
11-ஏப்-202102:15:13 IST Report Abuse
ஏடு கொண்டலு அறநிலையத்துறையை விட arrack- நிலையத்துறை அதிக வருமானம் ஈட்டுகிறதே, என்ன செய்வது?
Rate this:
Cancel
10-ஏப்-202118:42:29 IST Report Abuse
S SRINIVASAN if you stop BAR and wine shop no revenue to govt how they will manage pongada neengalalum ungal kolkaium (policies)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X