கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு 'ரேபிஸ்' மருந்து

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
ஷாம்லி: உத்தர பிரதேசத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற மூன்று பெண்களுக்கு, தவறுதலாக வெறிநாய் கடிக்கான, 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா தடுப்பூசி
கொரோனா, கொரோனா வைரஸ்,  ரேபிஸ், தடுப்பு மருந்து, தடுப்பூசி, சஸ்பெண்ட், பெண்கள்,

ஷாம்லி: உத்தர பிரதேசத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற மூன்று பெண்களுக்கு, தவறுதலாக வெறிநாய் கடிக்கான, 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள, அதே பகுதியைச் சேர்ந்த சரோஜ், 70, அனார்கலி, 72, மற்றும் சத்யவதி, 60, ஆகியோர், நேற்று முன்தினம் சென்றனர். அவர்கள் மூவருக்கும், கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக, வெறிநாய் கடிக்கான, 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டது.


latest tamil news


இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் ஜஸ்ஜித் கவுர் கூறியதாவது:சுகாதார மையத்தின் முதல் தளத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவர்கள் மூவரும் அங்கு செல்லாமல், மற்றொரு பிரிவுக்குச் சென்றுள்னர். அங்கிருந்த மருந்தாளுனர், அவசர வேலையாக வெளியே புறப்பட்டுள்ளார். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்படி, மற்றொரு நபரிடம் கூறியுள்ளார். அந்த நபர் தவறுதலாக, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார்.தவறுக்கு காரணமான மருந்தாளுனரை, 'சஸ்பெண்ட்' செய்யும்படி, தலைமை சுகாதார அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முறைகேடு குறித்து, விரிவான விசாரணை நடக்கிறது. அதுதொடர்பான அறிக்கை கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

அனார்கலி கூறுகையில், ''தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கேட்கவில்லை என்றதும், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரேபிஸ் தடுப்பூசியால், வீட்டிற்கு வந்ததும் மயங்கி விழுந்தேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
11-ஏப்-202106:47:40 IST Report Abuse
மதுரை விருமாண்டி நல்லவேளை பக்கத்தில் மாட்டு தொழுவம் இல்லை.. ராமராஜ்யத்தில் கோமியத்தை ஊசியில் ஏத்தி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. "ராம் நாம் சத்ய ஹை" ன்னு சொல்லி சங்கு ஊத வேண்டியது தான்..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202116:26:22 IST Report Abuse
J.V. Iyer மருத்துவர் செய்த தவறுக்கும் பா.ஜ., ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்? இந்த மருத்துவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராம்.
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
11-ஏப்-202106:45:35 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅதானே.. அம்புட்டு லட்சணத்தில் இருக்கு பீஜேபிகளின் ஆட்சி.....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-ஏப்-202113:56:23 IST Report Abuse
Ramesh Sargam இப்படி எல்லாம் நம் நாட்டில்தான் நடக்கும். காரணம், நேர்மையாக, கஷ்டப்பட்டு படித்து வந்திருந்தால் இதுபோன்ற பிரசிச்சினைகள் வராது. சிபாரிசு, அதிலும் அரசியல் சிபாரிசு, பணத்தை கொடுத்து பள்ளி, கல்லூரிகளில் இடம் பிடித்தல், பிறகு பணத்தை அதிகம் கொடுத்து பணியில் சேர்தல், இப்படி நடப்பதால்தான், அவர்களால்தான் இப்படி தவறுகள் நடக்கிறது. இனிமேலும் நடக்கும், நான் மேல்கூறிய சிபாரிசுகள் தொடருமானால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X