பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிட்டபடி மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு?

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ம் தேதி முதல் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஆய்வகங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்தே வைத்திருத்தல், மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு முன்பும், பின்பும் அறைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம்
Tamilnadu, Plus2, Exam, பிளஸ் 2, பொதுத்தேர்வு

சென்னை: திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ம் தேதி முதல் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஆய்வகங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்தே வைத்திருத்தல், மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு முன்பும், பின்பும் அறைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு, முழுமையாக குணமடைந்தபின் வேறொரு நாளில் செய்முறை தேர்வு நடத்தலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.


latest tamil news


இந்நிலையில், தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா என சந்தேகம் எழுந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதால் பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆயத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ம் தேதி முதல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
10-ஏப்-202115:42:48 IST Report Abuse
J.Isaac +2 தேர்வையும், நீட் தேர்வையும் நடத்த ஏன் அரசு இத்தனை ஆர்வம், அவசரம் செலுத்துகிறதோ ?
Rate this:
Cancel
jagadesh - chennai,இந்தியா
10-ஏப்-202114:01:54 IST Report Abuse
jagadesh 10 ஆம் வகுப்பு தனி தேர்வர்களின் நிலை என்ன ?
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
10-ஏப்-202113:51:49 IST Report Abuse
Rengaraj அதிகாரிகளே தயவு செய்து மாணவர்கள் எதிர்காலத்தில் விளையாடாமல் தேர்வுகளை சீக்கிரம் நடத்தி விடுங்கள். . தமிழகத்தின் புது அரசு அமைந்தவுடன் பார்க்கலாம் என்று முடிவை ஒத்திப்போட வேண்டாம். சுயநல அரசியல்வாதிகள் மூலம் மாணவர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கச்செய்ய வேண்டாம். எந்த கட்சி வேண்டுமானாலும் அரசு அமைக்கட்டும். இன்று ஆட்சி நடத்துவது அரசாங்க அதிகாரிகள் மட்டுமே. அவர்கள் நினைத்தால் நல்லது செய்யலாம். தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்து மையங்களை அதிகப்படுத்தி தேர்வுகளை நடத்தி விடுங்கள். மாணவர்கள் ஆல்பாஸ் என்ற நிலை மட்டும் வேண்டாம். பெற்றோர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள். நோய் என்ற காரணம் காட்டி தேர்வை தள்ளிப்போடாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X