சென்னை கடற்கரை பகுதிகளில் கட்டுப்பாடு: மாநகராட்சி ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை கடற்கரை பகுதிகளில் கட்டுப்பாடு: மாநகராட்சி ஆலோசனை

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னை: சென்னையில் கடற்கரை பகுதிகளில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடப்பதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.சென்னை பாலவாக்கத்தில் நிருபர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: சென்னையில், வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் எந்தவித சங்கடமும் இல்லாமல் தகவல்களை தெரிவிக்க வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அது
Chennai,Corporation,சென்னை,மாநகராட்சி

சென்னை: சென்னையில் கடற்கரை பகுதிகளில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடப்பதாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

சென்னை பாலவாக்கத்தில் நிருபர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: சென்னையில், வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் எந்தவித சங்கடமும் இல்லாமல் தகவல்களை தெரிவிக்க வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அது தொடர்பாக தெரிவிக்க வேண்டும். விரைவாக சிகிச்சை அளிக்கப்படும் போது உயிரிழப்பை தவிர்க்க முடியும். ஊழியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அறிகுறி இருந்தால் முகாமிற்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை நடத்தி கொள்ளலாம். ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால், அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.


latest tamil news2 டோஸ், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம். தேர்தல் காரணமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது அது அதிகரிக்கும்.தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம். கடற்கரைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க ஆலோசனை நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். காலையில நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsகூடுதல் பஸ்கள் இயக்கம்


கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. பஸ்களில் நின்று கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாஸ்க் அணிந்தவர்களை மட்டும் பஸ்களில் ஏற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது.
மதுரையில் ஒரு சில பஸ்களில் நின்றபடியே பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து, அந்த வழித்தடங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.


தமிழகத்தில் இன்று அமலான கட்டுப்பாடுகள்:* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.

* நோய் கட்டுப்பாடு பகுதிகளில், தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி, ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

* திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு, நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது.

* நாளை முதல் சென்னை, கோயம்பேடு வணிக வளாகத்தில், சில்லரை வியாபார காய்கனி அங்காடிகளுக்கு மட்டும், தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், மாவட்டங்களில் உள்ள, மொத்த வியாபார காய்கனி வளாகங்களில், சில்லரை வியாபார கடைகளுக்கு, தடை விதிக்கப்படுகிறது.

கட்டுப்பாடுகளுடன் அனுமதிகீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு, ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நடைமுறைகள், நாளை முதல் அமலுக்கு வரும்.

* தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

* கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முக கவசம் அணிவதையும், நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். முக கவசம் அணியாமல் இருப்போரை, கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது.

* ஏற்கனவே உள்ள, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும். அங்கு பணிபுரிவோருக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப, தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை, தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும்.

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத, தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* மாவட்டங்களுக்கு இடையிலான, அரசு மற்றும் தனியார் பஸ், சென்னை மாநகர பஸ் ஆகியவற்றில், அவற்றில் உள்ள இருக்கைகளில் மட்டும், பயணியர் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்று கொண்டு பயணம் செய்ய, அனுமதி கிடையாது
.

* அதேபோல, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா செல்லும் பஸ்களிலும், இருக்கைகளில் மட்டும் பயணியர் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். நின்றபடி பயணம் செய்ய, அனுமதி இல்லை.

* காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உட்பட, அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன், இரவு, 11:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
.

* உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், வாடிக்கையாளர்கள் இரவு, 11:00 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். 'பார்சல்' சேவையும், இரவு, 11:00 மணி வரை அனுமதிக்கப்படும்.

* கேளிக்கை விடுதிகள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்
.

* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் என, பொதுமக்கள் கூடும் இடங்கள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

* திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் என, அனைத்து திரையரங்குகளும், 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்படலாம்.

* உள் அரங்குகளில், அதிகபட்சமாக, 200 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.

* திருமண நிகழ்வுகளில், 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில், 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம்.

* விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் இல்லாமல், விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். நீச்சல் குளங்களில், விளையாட்டுப் பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்
.

* பொருட்காட்சி அரங்கங்கள், வர்த்தகர்களுக்கு இடையிலான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் வழிபாடு, இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படும். ஆனால், அனைத்து வழிபாட்டு தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

* சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள், தொடர்ந்து அனுமதிக்கப்படும். இதில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்
* வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில், டிரைவர் தவிர்த்து, மூன்று பயணியர் மட்டும் பயணிக்கலாம்.

* ஆட்டோக்களில், டிரைவர் தவிர்த்து, இருவர் மட்டும் பயணிக்கலாம்.

* ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர, பிற வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க, 'இ - பாஸ்' முறை செயல்படுத்தப்படும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X