பொது செய்தி

தமிழ்நாடு

9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: தகவல் ஆணையம் பரிந்துரை

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.இது தொடர்பாக அந்த ஆணையம், தலைமை செயலருக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தில் கூறி உள்ளதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. உதவி பேராசிரியர் முதுகலை ஆசிரியர் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை. கேள்வித்தாள் வடிவமைப்பில்
ஐஏஎஸ், அதிகாரிகள், கட்டாய பணிஓய்வு, பரிந்துரை, தலைமை செயலர்

சென்னை: தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

இது தொடர்பாக அந்த ஆணையம், தலைமை செயலருக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தில் கூறி உள்ளதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. உதவி பேராசிரியர் முதுகலை ஆசிரியர் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை. கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி ஏற்பட்டது. தேர்வர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தங்கள் எழுதிய விடைகள் தவறு என ஆசிரியர் வாரியம் தெரிவித்தது தவறு என தேர்வர்கள் புகார் அளித்தனர்.5 பேர் மேல்முறையீடு செய்ததில் விசாரணை நடத்தப்பட்டது. 2011- -20 வரை உதவிப்பேராசியர் தேர்வில் முறைகேடு மற்றும் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil newsஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பில் இருந்த 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணி ஓய்வில் அனுப்பலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதனால் 2011- 20 வரை தலைவர்களாக இருந்த அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202123:04:06 IST Report Abuse
DARMHAR அரசியல் வியாதிகளுக்கு துணை போவதற்காக அதிகாரிகளும் பணத்தாசை பிடித்து லஞ்ச ஊழல்களில் கண்ணியமின்றி மனச்சாட்சிக்கு விரோதமாக செயல் படுவதென்பது சகஜமாகி விட்டது இந்திய நாட்டின் சாபக்கேடு
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-ஏப்-202121:42:27 IST Report Abuse
மலரின் மகள் முழு மனதுடன் வரவேற்கிறேன். தேர்வாணையத்தை போன்ற அநீதி செய்வோரை வேறெங்கும் காண இயலாது. தேர்வாணையம் நன்றாக சிறப்பாக நியாயமாக நடந்திருந்தால், மலரின் மகள் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கவே மாட்டாள். லேடி ஹார்டிஞ் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியர் பதவிக்கு இடம் தகுதிபெற்று உத்திரவு பெற்ற அவர் தமிழகத்தில் வேலை செய்வதற்கு திறனற்றவராகவா இருந்தார் இத்தனைக்கும் எழுத்து தேர்வுகளில் முதலிடம் பெற்று தனக்கு அடுத்தவந்தவரை விட கூடுதலாக பத்து மதிப்பெண்கள் பெற்று முதலில் இருந்தவரை நேரடி தேர்வில் எவ்வளவு குறைந்த மதிப்பெண்கள் உண்டோ அதை மட்டுமே அளித்து பதவிக்கு அமர்தல் ரிசர்வ் லிஸ்டிற்கு மாற்றியதும் அதனை அடுத்த முறையில் ஒரே ஒரு பதவிக்கு மட்டுமே தேர்வாணையம் தனியாக மீண்டும் ஒரு தேர்வும் வைத்ததும் என்று எல்லாமே விதிகளுக்கும் நீதி தர்மத்திற்கும் தவறானவை தான். லஞ்சம் தரவே மாட்டேன் எதற்கும் எப்போதும் என்பது என் மன உறுதி. அரசு துறையில் வேலை அல்லது கல்லூரிகளில் இடம் என்று எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை. லஞ்சம் தரக்கூடாது என்பது என்றும் கடைபிடிக்கிறேன். எனது தந்தைக்கு லஞ்சம் தருவதும் பெறுவதும் பாவம் என்று உணர்ந்தவர். அதையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்தாக கருதி கடைப்பிடித்து வருகிறேன். லஞ்சம் தரும் எண்ணமே எனக்கு இல்லை எந்த தருணத்திலும் என்று இருப்பது உலகின் மிகப்பெரிய சொத்து. அந்த சொத்திற்கு மதிப்பு நமது மனதில் மட்டுமே இருக்கிறது. வெளியுலகில் அதற்கு மதிப்போ மரியாதையோ அல்லது மாற்றத்தக்கதோ கிடையாது. லஞ்சம் பெற்றோர் தண்டிக்கப்படவேண்டும். இப்பூவுலகிலும், மேலுலகிலும். ஈரேழு பதினாலு லோகத்திலும் ஏழுஜென்மத்திலும் அவர்கள் தண்டனை அனுபவிக்கவேண்டும். நிச்சயம் அனுபவிப்பார்கள். அன்னை பராசக்தி என்றும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள். ஆயிரம் கண்ணுடையாள் அவள்.
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202120:32:38 IST Report Abuse
Venkataramanan Thiru அவர்கள் வயது என்ன?எந்த தவறுகளில் அரசியல் தலையீடு இருந்ததா?தண்டனை எதோ ரஹஸ்யத்தை மறைப்பது போல் தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X