மே.வங்கத்தில் துப்பாக்கிச்சூடா? சிஆர்பிஎப் மறுப்பு

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தில் கூச்பெஹார் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் மத்திய படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் என திரிணமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையம், அந்த ஓட்டுச்சாவடியில் தேர்தலை நிறுத்தி வைக்கும்படியும் கூறி உள்ளது.இதனிடையே, சிஆர்பிஎப் வெளியிட்ட அறிக்கை
மே.வங்கம், சட்டசபை தேர்தல், துப்பாக்கிச்சூடு, ஓட்டுப்பதிவு, தேர்தல் ஆணையம், பலி, உயிரிழப்பு

கோல்கட்டா: மே.வங்கத்தில் கூச்பெஹார் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் மத்திய படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் என திரிணமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையம், அந்த ஓட்டுச்சாவடியில் தேர்தலை நிறுத்தி வைக்கும்படியும் கூறி உள்ளது.

இதனிடையே, சிஆர்பிஎப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளதாவது: சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில் சிஆர்பிஎப் வீரர்கள் பணி அமர்த்தப்படவில்லை எனவும், இந்த சம்பவத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கடந்த மாதம், 27ல் துவங்கி, இம்மாதம், 29 வரை, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 44 சட்ட சபை தொகுதிகளுக்கு, நான்காம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. ஹவுரா, தெற்கு 24 பரகனாஸ், ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


latest tamil news



இந்நிலையில், கூச்பெஹார் பகுதியில் 126ம் மதபங்காவில் 126 ம் எண் வாக்குச்சாவடியில் மத்திய படை போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக திரிணமுல் காங்கிரசார் குற்றம்சாட்டி உள்ளனர். உள்ளூர் பகுதியை சேர்ந்த சிலர், துப்பாக்கியை பறிமுதல் செய்ய முயற்சி செய்ததால், சிஐஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாலை 5 மணிக்குள் அறிக்கை அளிக்கும்படி சிறப்பு பார்வையாளருக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும், அந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டு உள்ளது.


மம்தா கண்டனம்

4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்களை கொல்லும் தைரியம் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எங்கிருந்து வந்தது. சிஆர்பிஎப் எனது எதிரிகள் அல்ல. ஆனால், உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் கீழ் சதி நடக்கிறது என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan Iyer - Bangalore,இந்தியா
10-ஏப்-202122:03:29 IST Report Abuse
Kannan Iyer சி ஆர் பி எப் பற்றி யார் சொன்னது ஏற்கனவே வந்த தகவல்கள் சி ஐ எஸ் எப் அல்லவா துப்பாக்கி சூடு நடத்தியதாக குறிப்பிட்டன. இந்த செய்தியின் உள்ளும் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் தேர்தல் வேலைக்கு அனுப்பப் பட்டிருந்தினரா? சாதரணமாக மத்திய அரசின் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டியது இப்படையின் பொறுப்பு அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிக்க கும்பல் முயற்சித்ததா? விவரம் தெரியாமல் குழப்பக்கூடாது
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-ஏப்-202121:42:42 IST Report Abuse
Vijay D Ratnam மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கதையை கம்யூனிஸ்ட் முடித்தது, ஜோதிபாசு வந்தார். கம்யூனிஸ்ட் கதையை திரிணாமுல் காங்கிரஸ் முடித்தது, மம்தா பானர்ஜி வந்தார். இப்போது திரிணாமுல் காங்கிரஸ் சோலியை பாஜக முடிக்க போகிறது. அக்கா பஞ்சர் ஆவப்போறது உறுதி.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
10-ஏப்-202118:53:14 IST Report Abuse
Darmavan மம்தா பேகத்தின் ஸ்டண்ட் வேலை.அனுதாபம் தேடுகிறாள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X