மே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சிலிகுரி: மே.வங்கத்தில் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.சிலிகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது : கூச்பெஹாரில் நிகழ்ந்த சம்பவம் கவலை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். பா.ஜ.,விற்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து மம்தாவும், அவரது கட்சி
Modi, Narendra modi, Prime minister, west bengal, mamata banarjee, mamata, பிரதமர் மோடி, பிரதமர், நரேந்திர மோடி, மேற்கு வங்கம், மே.வங்கம், அரசியல் சூழ்நிலை


சிலிகுரி: மே.வங்கத்தில் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

சிலிகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது : கூச்பெஹாரில் நிகழ்ந்த சம்பவம் கவலை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். பா.ஜ.,விற்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து மம்தாவும், அவரது கட்சி குண்டர்களும் கவலை அடைந்து உள்ளனர். தோல்வி பயத்தால், மம்தா, திரிணமுல் குண்டர்கள் இந்தளவு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்ற பணிகளை, செய்ய அனுமதிக்க முடியாது என மம்தாவிற்கு தெரிவித்து கொள்கிறேன். கூச்பெஹார், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்.


latest tamil news




இது மாதிரியான வன்முறைகள், பாதுகாப்புபடையினருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் சூழ்ச்சிகள், தேர்தல் நடவடிக்கையை நிறுத்தும் சூழ்ச்சி போன்றவை உங்களை பாதுகாக்காது என்பதை மம்தா தெரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகாலம் மோசமான நிர்வாகம் நடத்திய உங்களை இது போன்ற வன்முறைகள் காப்பாற்றாது. பல ஆண்டுகளாக மே.வங்கத்தில் உருவாக்கப்பட்ட அரசியல்சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்து விட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-ஏப்-202111:35:54 IST Report Abuse
Malick Raja கிராமங்களில் பல மொழி.. தம்பி தலையெடுத்தான் காப்பணத்திற்கு கறியெடுத்தான். எந்த நேரத்தில் வந்ததோ அன்று தொடங்கிய சனி... என்றைக்கு பிஜேபி ஆட்சிக்கு வந்ததோ அன்று தொடங்கின சரிவு .இழப்பு ,பேரிடர் ,பெரும் பரவுதல் நோய் என்று பலவும் நாட்டை பீடித்ததுதான்... முதலில் காங்கிரஸ் ஆட்சியில் 50 ஆண்டுகள் முடிந்தும் பெட்ரோல் 67 ரூ தாண்டவில்லை ..புண்ணியவான்கள் வந்து 8 ஆண்டுகளில் ரூ 26 கூடி இன்று 93 ரூ பெட்ரோல் ..இது ஒன்றே போதுமானது .. போதாக்குறைக்கு 100 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஒரு வகை காய்ச்சல் அதுதான் மிகப்பெரிய தொற்றுநோய். ஆனால் இன்று கொரோனா பன்மடங்கு வீரியம் கொண்டு ஆட்கொண்டிருக்கிறது .. இது போதும் சாபேக்கேடு என்பதற்கு .. இப்படி நாடு வீழ்ச்சியை மட்டுமே வளர்ச்சியாக கொண்டுள்ளது மத்திய அரசின் சிறப்பு .. வேறெதுவும் சொல்லவேண்டியதில்லை
Rate this:
Cancel
kamal basha - sudugadu,இந்தியா
11-ஏப்-202110:16:34 IST Report Abuse
kamal basha உங்களை விட மம்தா ஆட்சி சூப்பர்
Rate this:
Cancel
11-ஏப்-202107:41:09 IST Report Abuse
ஆப்பு சரி... படத்துல ஐயா போட்டிருக்கற தொப்பி யாரை கவர்வதற்காக ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X