பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: சுகாதார செயலர்

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாளுக்கு நாள் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால், பொது மக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி
corona, coronavirus, vaccine, health seceretary, Radhakrishnan, கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, சுகாதார செயலர், ராதாகிருஷ்ணன்,

சென்னை: தமிழகத்தில், கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாளுக்கு நாள் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால், பொது மக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள விக்டோரியா கல்லூரியின் மாணவர் விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,


latest tamil newsதற்போது மாநிலத்தில் 33,659 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் 12,861 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரித்து வருகிறோம்.
மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை. 18 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளன. தினசரி 2 லட்சம் டோஸ்கள் செலுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதனால், 9 நாளுக்கு தேவையான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. இவ்வாற அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மன்னிப்பு - Madurai,இந்தியா
11-ஏப்-202110:10:10 IST Report Abuse
மன்னிப்பு உலகில் அதிகமாக தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். இங்கே ஒன்றும் தட்டுப்பாடு இல்லை. முக கவசம் போட சொன்னால் போடுவது இல்லை. 8 மணிக்கு மூட சொன்னால் 10 மணி வரை மூட மாட்டோம் என்று போராட்டம் செய்வது.அப்பறம் கொரானா தொற்று பரவாமல் என்ன செய்யும்? தடுப்பூசி போட சொன்னால் என் கடவுள் அதை போடக்கூடாது என்று சொல்வது. தடுப்பூசியை யாரும் வீணாக கீழே கொட்டுவது இல்லை. மருந்தை திறந்தால் 10 பேருக்கு கண்டிப்பாக போட வேண்டும். ஆனால் பலர் சரியான நேரத்திற்க்கு வருவது இல்லை. அதுதான் பிரச்சனை. போய் மருத்துவமனையில் பார்க்கவும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
11-ஏப்-202100:26:23 IST Report Abuse
ஆப்பு இவுரு இல்லேன்னா இருக்கு. வராதுன்னா வரும். ஸ்டாக் இருக்குன்னா இருக்குமா?
Rate this:
Cancel
Sesh - Dubai,பகாமஸ்
10-ஏப்-202123:29:58 IST Report Abuse
Sesh in Coimbatore last 2 weeks no stock in govt and private hospitals.govt keep on lying. until election result no one can control govt staff.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X