தடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம்: சோனியா

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: தடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், இதன் பிறகே ஏற்றுமதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறி உள்ளார்.நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் அக்கட்சி இடைக்கால தலைவர் சோனியா வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்
SONIA, SONIA GANDHI, CONGRESS, CORONA, CORONA VIRUS, COVID19, VACCINE, INDIANS, EXPORT, SHORTAGE, STATES, RAHUL, RAHUL GANDHI, சோனியா, சோனியா காந்தி, காங்கிரஸ்,  தடுப்பூசி, மருந்து, பற்றாக்குறை, கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19,

புதுடில்லி: தடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், இதன் பிறகே ஏற்றுமதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறி உள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் அக்கட்சி இடைக்கால தலைவர் சோனியா வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ராகுலும் கலந்து கொண்டார்.

அப்போது சோனியா பேசியதாவது: பரிசோதனை செய்வது, தொடர்புகளை கண்டறிதல் மற்றும் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்த உண்மையான அறிக்கையை அறிவிக்க வேண்டும். முதலில், இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பின்னர் தான் ஏற்றமதி செய்வதும், மற்ற நாடுகளுக்கு பரிசளிக்கவும் வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.


latest tamil news



தேர்தல் பிரசாரம் மற்றும் மத வழிபாட்டு கூட்டங்களுக்காக நாம் அதிகளவில் கூடி கொரோனா பரவ ஒரு வகையில் காரணமாக அமைந்து விட்டோம். இந்த உண்மையை ஏற்று கொண்டு. நாட்டு நலனை முன்னிறுத்த வேண்டும்.மோடி நிர்வாகம் சூழ்நிலையை மோசமாக கையாண்டதுடன், தடுப்பூசியை ஏற்றுமதி செய்ததால், இந்தியாவில் பற்றாக்குறை நிலவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
12-ஏப்-202117:58:46 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ நேற்றைக்கு மகன் இன்று அம்மா....என்ன சீனாவிடமிருந்து போட்ட ஒப்பந்தத்திற்கு விசுவாசமாக நடக்கச்சொல்லி அழுத்தம் அதிகம் கொடுக்கப்படுகின்றதோ? சீன தடுப்பூசிகளை உலகம் நிராகரிக்கிறது, இந்தியா தடுப்பூசி ஏற்றுமதி, ஏழை நாடுகளுக்கு இலவச வினியோகம், தன் சொந்த மக்களுக்கான பயன்பாட்டுக்காக பட்டி தொட்டி எங்கும் தட்டுப்பாடின்றி கொடுத்துக் கொண்டிருக்கிறது, ஊசி போடச்சென்ற யாருக்கும் தடுப்பூசி நம் ஊரில் ஒரு இடத்தில் கூட இல்லை என்று இந்தியாவில் எந்த ஒரு சிறு கிராமத்தில் கூட சொல்லவில்லை, அப்படி எந்த ஆதாரமும் இல்லை, இருந்தால் உடனடியாக சரியும் செய்யப்படும், ஆனால் இந்த சீன கைக்கூலிகள் தன் பழைய ஒப்பந்தத்திற்கு விசுவாசமாக இந்திய ஏற்றுமதியை தடுத்தால்தான் வேறுவழியின்றி சீனனின் தடுப்பூசியை உலகம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படவேண்டும் என்று சீனாவுக்கு வாலாட்டுகிறான், (அன்னை மம்மி மற்றும் பப்பு கண்ணா, சீனாவில ஒருத்தர் விடாம எல்லாத்துக்கும் சினோவேக்ஸ் ஊசி போட்டு முடிச்சாச்சா, சில ஆப்ரிக்க நாடுக்கு ஏத்துமதி பண்ணிகிட்டிருக்காரே ஜின்பிங், அவருகிட்ட ஏற்றுமதிய நிறுத்தணும்னு சொல்லுவீங்களா?)
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஏப்-202113:05:59 IST Report Abuse
Lion Drsekar தேர்தல் நேரத்தில் மட்டுமே வெளிவரும் குறிஞ்சிப்பூ , வந்தே மாதரம்
Rate this:
Cancel
11-ஏப்-202112:43:29 IST Report Abuse
பேசும் தமிழன் உன் கோமாளி பையன் பப்பு.... இரண்டு மாதம் முன்பு... இதே தடுப்பூசி மீது சந்தேகம் தெரிவித்தார்... இப்போ என்ன இந்திய மக்கள் மீது அக்கறை போன்ற நடிப்பு.... நீயும் உன் பையனும் சீனாவிடம் வாங்கிய பணத்துக்கு.... இந்திய ஏற்றுமதியை தடுத்து... சீனாவின் மருந்து வர்த்தகம் அதிகரிக்க செய்யும் முயற்சி என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X