பொது செய்தி

தமிழ்நாடு

திராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங்

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (133)
Share
Advertisement
சென்னை : சமூகவலைதளமான டுவிட்டரில் பல்வேறு விஷயங்கள் டாப் டிரெண்டிங்கில் வருகின்றன. இன்று(ஏப்., 10) #திராவிடம்னாஎன்ன என்ற ஹேஷ்டாக் திடீரென டிரெண்ட் ஆனது. ஏன், எதற்கு இந்த ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது என்றே தெரியவில்லை பலரும் இந்த ஹேஷ்டாக் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தென்னிந்தியா முழுக்க திராவிடம் என்று கூறினாலும் மற்ற மாநிலத்திவர்கள் அதை
திராவிடம்னாஎன்ன, திராவிடம், தமிழ்நாடு,

சென்னை : சமூகவலைதளமான டுவிட்டரில் பல்வேறு விஷயங்கள் டாப் டிரெண்டிங்கில் வருகின்றன. இன்று(ஏப்., 10) #திராவிடம்னாஎன்ன என்ற ஹேஷ்டாக் திடீரென டிரெண்ட் ஆனது. ஏன், எதற்கு இந்த ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது என்றே தெரியவில்லை பலரும் இந்த ஹேஷ்டாக் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தென்னிந்தியா முழுக்க திராவிடம் என்று கூறினாலும் மற்ற மாநிலத்திவர்கள் அதை ஏற்கவில்லை. தமிழகம் மட்டுமே திராவிடம் என்ற பெருமையோடு இருக்கிறது. அதையும் அரசியல் கட்சியினர் மட்டும் இன்றும் இது திராவிட நாடு, திராவிட மண் என்று சொல்லி அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அனேக மக்கள் தமிழ்நாடு, தமிழ் மண் என்றே கூறி வருகின்றனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு வரை திராவிடத்தை வைத்து பல அரசியல் கட்சியினர் பிரச்சாரங்கள் செய்து வந்தனர்.

இதனால் டுவிட்டரில் தமிழக அரசியல் களம் தொடர்பான நிகழ்வுகளும், நாடு தழுவிய பல்வேறு விஷயங்களும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகின. அந்தவகையில் இன்று #திராவிடம்னாஎன்ன என்ற ஹேஷ்டாக் திடீரென டிரெண்ட் ஆனது. எதற்கு இந்த ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகிறது என்றே தெரியவில்லை. இந்த ஹேஷ்டாக்கில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக திராவிடம் என்ற சொல்லுக்கு பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் பதிவிட்ட கருத்துக்களை இங்கு பார்ப்போம்....


latest tamil news* திராவிடம் என்ற பெயரில் ஒரு நாடோ, ஒரு இனமோ, மொழியோ இருந்ததில்லை. திராவிடம் என்ற சொல்லை மற்ற தென்னிந்தியர்கள் யாரும் ஏற்றதில்லை. தமிழிலில் இருந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் பிரிந்தன என்பதைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

* முன்னொரு காலத்தில தமிழ்நாட்டுல தெலுங்கர்கள் இருந்ததாகவும்,அவங்க தங்கள தமிழர்கள் ன்னு சொல்ல முடியாது அப்படிங்குறதாள நாங்களெல்லாம் திராவிடர்கள் ன்னு சொல்லி தமிழர்களோட நிலபரப்பையும் இடஒதுக்கீட்டையும் சுரண்டி திங்க வந்ததாகவும் வரலாறு உண்டு..

* எனக்கு ஒன்பது மொழி தெரியும். ஏதாவது ஒரு மொழில திராவிடம்னா என்னனு சொல்லு.

* உடன்பிறப்புக்களே, திராவிடம்னா என்ன சொல்லுங்க. அது என்னான்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாம் அரசியலுக்காக மட்டும் தான். 70 வருசமா உருட்டிக்கிட்டு இருக்குறோம்.... #திராவிடம்னாஎன்ன தெரியுமாடா(உடன் பிறப்புகளே கூறுவது போன்று மீம்ஸ்)

* திராவிடம் ஒரு பழைய பாழடைந்த ஜமீன் பாங்களா. சுற்றிப் பார்க்கலாம். செல்பி எடுக்கலாம். யூட்யூப் வீடியோ போடலாம். வாழ முடியாது.

* பிற மொழியாளர்கள் வசதியாக வாழ்வும் தமிழர்கள் அடக்கி ஆள்வதற்கு உருவாக்கிய சொல்லே திராவிடம்.

* திருடர்கள் தமிழ்நாட்டை ஆட்சியென்ற பெயரில் கொள்ளையடிக்க வசதியாக ஏற்படுத்திக்கொண்ட பட்டைப் பெயர் தான் திராவிடம்.

* திராவிடம் என்றால் என்ன? தமிழரல்லாதவர்கள் தமிழ்நாட்டில் ஏமாற்றி பிழைக்கவும் வசதியாக வாழவும் ஆளவும் பயன்படுத்தும் கருவியே திராவிடம்.

* திராவிடம் என்றால் கோபாலபுரம் இல்லம். திராவிட மக்கள் என்றால் கருணாநிதியின் குடும்பம்.

* இங்கதான் 50,60 வருடமா திராவிடம் பேசுறோம், ஆனா என்னனு தெரியாது... எல்லாம் வயிற்று பொழப்புக்கு தான்.

* சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், சித்தர்கள் இலக்கியம் எதிலுமே திராவிடம், திராவிடர் என்ற சொல் இல்லை. ஆரிய பாடலான ஜனகனமன பாடலில் மட்டுமே உள்ளது. தமிழர்களின் இயல்பான அடையாளத்தை அழிக்கவே திராவிடர் என்ற பெயர் சூட்டப்பட்டது.!


latest tamil news* தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து சொல்லடா. திராவிடம் என்பது என்னடா இப்பவாவது சொல்லடா.

* தமிழர்கள் சாதி வெறியர்கள் என்று சொல்லி விட்டு திராவிடம்தான் சாதியை ஒழித்தது சொல்லி உருட்டும் முரட்டு உருட்டே திராவிடம்

* திராவிடம் என்பது தமிழ் சொல்லே இல்லை என்றால் இவர்களுக்கு புரியவா போகிறது. சோமசுந்தர பாரதியார் கூறியுள்ளதை பாருங்கள். இன்று வரை கூட தன்மானம் என்பதை சமற்கிருதத்தில் சுயமரியாதை என்று தான் பேசி கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி தமிழர் தமிழன் என்பார்கள்?

#திராவிடம்னாஎன்ன அது ஒன்னும் இல்ல தம்பி!! நான் அவன எதிர்பன் அவன் என்ன எதிர்பான் இத 70வருஷமா நாங்க ஒரு தமாஸ்சா வே பண்ணிக்கிட்டு இருப்போம்.

* ஒன்னும் தெரியாதவன், தன்ன தானே மேதாவினு காட்டிக்கொண்டு பிற சிந்தனை உள்ளவர்களை மட்டம் தட்ட, இப்போது பயன்படுத்தும் ஒரு புரட்டே, திராவிடம்..

* தமிழ்ல இருந்து பிரிந்த மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம் , மலையாளம். அதனால் நாங்கள் திராவிடம் என்று கூறுகிறோம். அட கூறு கெட்டவனுகளா அப்பன் பெயர விட்டுட்டு பிள்ள பெயர வைப்பானா யாராவது..?

Advertisement
வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.Saravanan - chennai,இந்தியா
16-ஏப்-202113:25:20 IST Report Abuse
B.Saravanan tamil nadu thiravidaman not for others change name
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஏப்-202105:42:05 IST Report Abuse
meenakshisundaram தமிழன் மனதிலேந்து இந்த வார்த்தை ஒழிந்துபோக வேண்டும் .தவறான வார்த்தை ,தவறான அர்த்தங்கள்
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
13-ஏப்-202117:09:54 IST Report Abuse
S.P. Barucha திராவிடம் என்பது களிமண் . எவ்வளவு ஓதினாலும் நெருப்பு உண்டாகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X