பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (87)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று (ஏப்.,10) காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பாக கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில்
NEET, Tamilnadu, MedicalEntrance, தமிழகம், நீட், மருத்துவ நுழைவுத்தேர்வு

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று (ஏப்.,10) காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பாக கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான நிலைப்பாடு குறித்து சில தெளிவான விஷயங்களை முன்வைத்தனர்.


latest tamil newsஅதில் தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குத் தேவை என்றும் வலியுறுத்தினர். மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து கடைபிடிப்போம் எனவும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட விஷயங்களை விளக்கியுள்ளனர். இது குறித்த தெளிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
11-ஏப்-202112:08:05 IST Report Abuse
vbs manian உச்ச நீதிமன்றத்தால் தரமான மருத்துவ படிப்பு கிடைக்க ஏற்படுத்தப்பட்ட நடைமுறை. இந்தியாவில் பெரும்பான்மையின மாநிலங்கள் எந்த வித முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்று கொண்டுள்ளன. ஏற்கமாட்டோம் என்று எப்படி சொல்வார்கள்.. ஹைர் காலத்து சிலபூசை வைத்து கொண்டு நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது. சிலபூசை மேம்படுத்துவதில் என்ன கஷ்டம்.அடுத்து ஏழை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ஏழை பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லையா. அவர்கள் ஒன்றும் எதிர்க்கவில்லையே.தமிழ்நாட்டில் மாணவர்களை வைத்து அரசியல் தலைகள் விளையாடும் சித்து விளையாட்டு. இந்த அரசியல் கல்வித்தந்தைகள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் ஐம்பது அறுபது லச்சம் கேபிடேஷன் டொனேஷன் பீஸ்..வியாபாரம் நடக்கிறது. ஏழை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஐம்பது அறுபது லட்சம் பீஸ் கட்ட முடியுமா. யாரை ஏமாற்றுகிறார்கள். பக்கத்துக்கு ஆந்திராவில் இதே நீட் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர் தேர்ச்சி பெறுகின்றனர். எப்படி. ஆந்திராவில் தெலுங்கானாவில் கல்வி உரிமை பறிபோய் விட்டது என்று யாரும் புலம்பவில்லை. எந்த அரசியல் வாதியும் வரிந்து கட்டி மல்லுக்கு நிற்கவில்லை. தமிழக மக்களே சிந்தியுங்கள். காசு பார்க்கும் அரசியல் வாதிகளின் தந்திர விளையாட்டு. எல்லா கட்சிகளும் இதில் அடக்கும். மருத்துவ கல்வி தரம் பற்றி இவர்களுக்கு துளியும் கவலை இல்லை. காசு காய் விட்டு போகிறதே என்ற ஒரே கவலை. நாடு முழுதும் ஏற்றுக்கொண்ட ஒன்றை முடியாது என்று எப்படி சொல்வார்கள். தமிழ் நாடு தனி நாடு ஆகிவிட்டதா. ஏழை பிற்படுத்தப்பட்டோர் நிட்டை ஜெயிக்க வழி வகை செய்யுங்கள் உங்கள் சுய நலத்துக்காக மாணவர்களை தூண்டி விஷ விளையாட்டு விளையாடாதீர்கள்.
Rate this:
11-ஏப்-202117:47:35 IST Report Abuse
 rajanYour comments are welcome. it is pointed out that why the State Govt is not opposing eight lane project of Central Govtwhile they oppose neet and reservation introduced by Center? . please read it once again....
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11-ஏப்-202118:49:51 IST Report Abuse
Mirthika Sathiamoorthiமறுபடியும் மறுபடியும் ஒரே பல்லவி ..தரம் இன்னொன்னு கேபிடல் பீசு..பதில் சொல்லி பதில் சொல்லி புளிச்சுப்போச்சு...இந்த கருத்தை பதிவு பண்ணி பதிவு பண்ணி தினமலருக்கு சலிச்சுப்போயிருக்கும்...முதல்ல கேபிடல் பீஸ்... கேபிடல் பீஸ் எங்கே வாங்குறாங்க ? அரசு கல்லூரிகளிலா? தனியார் கல்லூரிகளிலா? நீட் அவசியம் இல்லைன்னா ஏழை மாணவர்கள் எப்புடி கேபிடல் பீசு காட்டுவானுக?...அம்ம்மா புல்லரிக்குது உங்க ஏழைமாணவர்கள் பாசம்...அடுத்து தரம்... இப்போ ரெண்டுக்கும், நீட்டுக்கு முன் அரசு கல்லூரிகளில் சேர கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? OC 199.25 BC 198.25 BCM 197 MBC 197.50 SC 194.50 ST 188 அதுமட்டுமா இந்த அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர கேபிடல் பீசு எவ்வளவுங்க? உங்க கணக்குப்படி தரமற்ற, கேபிடல் பீசு வாங்கும் தனியார் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு சரி...தரமான கேபிடல் பீசும் வாங்காத அரசு கல்லூரிகளுக்கும் எதுக்கு நீட்? 190 க்கு மேல் எடுத்தால் மட்டுமே மருத்தவம் எனும் தகுதியை விட நீட் அப்படியென்ன தகுதியை கண்டுபிடித்துவிட்டது என்று சொல்லி அரசுக்கல்லூரிக்கும் நீட்? எந்த ஏழைமாணவனை காக்க இந்த அரசுக்கல்லூரிக்கும் நீட்? எல்லோருக்குமான கல்வியா இல்லை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் மட்டும் கல்வியா? நீட் ஏழைமாணவனுக்கு உதவுது..எதன் அடிப்படையில் இந்த தகவல்..வெறும் தேர்வு ஒரு மாணவனை தகுதியானவனாக்குமா? தேர்வில் இடம்பெறும் கோச்சிங் தேர்வுக்கனா மிகசிறந்த வழிகாட்டி இருந்தால் யார் வேணும்னாலும் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிக்காமலே நீட் எழுதலாம்..JEE பற்றி கேள்வி பட்டிருப்பீங்க அது ஒரு கௌரவம் அதில் பாஸானால்..அதை ஒரு OXBOARD பிரிட்டிஷ் கல்லூரி மாணவன் ஒரு கிண்டலுக்கு அந்த தேர்வை எழுதினால் என்ன என நினைத்து அதை 100% சரியாக விடையளித்தான்...எவனெல்லாம் JEE டாப் மார்தட்டினானோ இதை பார்த்து நொந்து நூலாயிட்டான்..தேர்வா ஒருவனின் தகுதியை தீர்மானிக்குது...தமிழகத்தின் கல்வித்திட்டம் சமூகநீதி திட்டம்...தகுதியானவனை தேர்ந்தெடுப்பதல்ல.... சேவை செய்பவனை தேர்ந்தெடுப்பது..அடிமட்ட சமூகத்தை மேலே கொண்டுவருவது... A broad-based education....சுகாதரமான சமூகத்தை உருவாக்க நினைப்பவனை மருத்துவனாக்கும் கல்வி..இந்தியாவிலே மிக சிறந்த மருத்துவ துறை தமிழகத்தின் health care tem ...இது வளரும் நாடுகளுக்கு மிகசிறந்த முன் உதாரணம்...இதை நான் சொல்ல, சொன்னது The Lancet report on Good Health at low cost: Lessons for the future of health tems strengthening...இப்படி ஒரு கட்டமைப்பை உடைச்சு நாசம்பண்ணி நீட் தான் சரியான மிக சிறந்த மருத்துவனை உருவாக்கும்ன்னு சொன்ன வயிறு எரியாது? ஒரு மாநில உரிமையை பறிச்சு வெற்றிகிராம நடந்திட்டுவர்ற ஒரு முறையை முற்றிலும் தவறுன்னு எதைவச்சு சொல்றோம் ? கலைஞர் ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தா? இவங்க ரெண்டுபேரும் இருந்தப்ப ஜம்பம் வேகலையே.. பக்கத்துமாநிலங்கள் பாத்து..மற்ற மாநிலங்கள் எதிர்க்கல ஏன் தமிழகம் மட்டும்? ஏனெற்றால் இது சமூக நீதிக்கான பிரச்னை.....யார் மருத்துவனாகணும்ன்னு யார் தகுதியானவன்னு சொல்ல நாம் யார்?.மற்ற மாநிலங்களில் சமூக நீதியே கிடையாது..ஏன் என்று கேள்வி கேக்கும் தமிழ்ச்சமூகம்...தலையெழுத்தென்னு வாழ இது வாட மாநிலம் அல்ல..என்ன சமூக நீதி கெட்டுப்போச்சு..முதலில் சமூக நீதி என்றால் என்ன? ஒரு உதாரணம் உலகமுழுவதும் மேல் படிப்புக்கு செல்லும் இந்தியர்களில் தமிழகத்திலிருந்து மட்டும்தான் எல்ல சாதியிலிருந்து போறான்...வாட மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே மேல் படிப்புக்கு போகுது..வெளிநாட்டு வேலைக்கு போகும் இந்தியர்களில் ஐவரில் ஒருவன் தமிழன்...திராவிட கட்சிகள் என்ன செஞ்சது? நாங்கள் தரமான கல்வியை கொடுக்கலை தகுதியான ஒருவனை உருவங்களை..ஆனால் சமூகத்தில் படிப்பின் அவசியத்தை உணர்த்தியாத்தோடு மட்டுமல்லாமல் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கின்றோம்..அதெல்லாம் கூடாது கோச்சிங் சென்டர் போக வசதியுள்ளவன் மட்டும் மருத்துவனாக எப்புடி ஏற்றுக்கொள்ளமுடியும்? மரம் ஏறத்தெரிந்தவனுக்கு மட்டுமே காட்டில் வாழும் தகுதின்னு குரங்கையும் மீனையும் ஒண்ணா நிக்கவச்சு மீனு உனக்கு மரம் ஏற தெரியலை அதனால் உனக்கு தகுதியில்லன்னு மீனை நம்பவைப்பதற்கு பெயரா தகுதி தேர்வு? நீட் மோடியை எதிர்க்கும் திமுக...தமிழ்நாட்டை பொறுத்தவரை யார் பிரதமாரான என்ன? தொடர்ந்து ஆப்புவைச்சும் நீட் எதிர்க்கட்சிகள் அரசியல்பண்ணுதுன்னா? ஏன் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தகுதியானவனை உருவாக்கும் நீட் அதை நாங்கள்தான் கொண்டுவந்தோம்ன்னு கூக்குரல் கொடுக்கலை ? மிக சிறந்த திட்டமாச்சே ஏன் அதைவைத்து பிரச்சாரம் செய்யிலா? யார் உண்மையில் நீட் வைத்து அரசியல் செய்வது? உங்க பேச்சுக்கே வர்றோம் நீட் தகுதியானவன உருவாக்குது...இங்கே தகுதியான மருத்துவன் தேவையா சேவை மனப்பான்மையுள்ள மருத்துவன் தேவையா? தகுதியானவனை உருவாக்க நீட்...சேவைமனப்பான்மை உள்ளவனை உருவாக்க என்ன தகுதி தேர்வு? அதையும் சொல்லிடுங்க.....
Rate this:
Cancel
11-ஏப்-202111:52:13 IST Report Abuse
ஆரூர் ரங் அறிவுள்ள புத்திசாலி எந்தத் தேர்வுக்கும் அஞ்ச😃 மாட்டான். முட்டாள் மூணாம் கிளாஸ் தேர்வுக்கே😬 அலறுவான் .. நாம் எந்த வகை? நாட்டிலேயே 3 அறிவியல் NOBEL பரிசு வாங்கிய ஒரே மாநிலமான தமிழ்நாட்டில் இப்போ அறிவுக்கும் துணிச்சலுக்கும் பஞ்சம். எல்லாம் சமச்சீரால் வந்த வினை
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
11-ஏப்-202111:36:48 IST Report Abuse
வந்தியதேவன் இங்க வந்து... இன்னாமா கம்பு சுத்துறானுங்க பாரு... சங்கிகங்க...? ஒண்ணு கேக்குது... மத்திய அரசு கொண்டு வருவதை அனைத்தும் எதிர்த்தா என்ன அர்த்தம்னு... அதே மேதாவி... எட்டு வழிச் சாலைய பத்தி பேசுது... அந்த பக்கி..? எட்டு வழிச்சாலையில்... உனது வாழ்வாதாரமாய்... உன்னுடைய சோத்துக்கு ஆதாரமாய் இருக்குற ஒரு ஏக்கர் நிலத்தை புடுங்குனா... அப்ப தெரியும் அந்த வலி... வேதனை... கஷ்டம்... என்னன்னு...? விவசாயிகளின் வயிற்றெரிச்சலை வாங்கியவன் எவனும் அமைதியாக... தூக்கத்தில் செத்தவனில்லை... மரணிக்கும்போதும்... நரக வேதனையை பூமியில் அனுபவித்துவிட்டுதான் செல்வான்... ஏனென்றால்... சுகமாக பத்து டூ ஐந்து... ஏசி ரூமில் உட்கார்ந்து.. கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து ஒரு நாள் கூலியாக முப்பதாயிரம் வாங்குறவன் அல்ல... அந்த விவசாயி... அவன் கடும் வெயிலிலிலும், மழையிலும், காற்றிலும், பனியிலும் தனது வாழ்வாதாரத்திற்காக உழைப்பையே மூலதனமாக கொண்டு உழைக்கும் அந்த விவசாயியின்... விவசாயக் கூலியின் அடிவயிற்றில் அடித்தவன்.. மரிக்கும்போது.... மரண வேதனை அனுபவித்தே மரிப்பான்... இதுல.. எட்டுவழிச்சாலைக்கு வக்காலத்து வாங்குது.. இது...,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X