மே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோரின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர், ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும்
PrashantKishor, ClubHouse, AudioLeaked, AntiIncumbency, Trinamool, TMC, BJP, WestBengal, Audio, Chat, Leaked, பிரசாந்த் கிஷோர், திரிணமுல் காங்கிரஸ், ஆடியாே, மேற்குவங்கம், பாஜக,

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர், ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் சூழலில், திரிணமுல் காங்., கட்சிக்கு தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ‛ஐ-பாக்' நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது. ‛மே.வங்கத்தில் பா.ஜ., இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப்போகிறது. பா.ஜ., வெற்றிப்பெற்றால், தான் டுவிட்டரில் இருந்தே வெளியேறி விடுகிறேன்,' என்றும் அவர் நம்பிக்கையாக கூறியிருந்தார்.


latest tamil newsஇந்நிலையில் பிரசாந்த் கிஷோர் ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசியதாக மூத்த தலைவர் அமித் மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிளப்ஹவுஸ் உரையாடலில் பிரசாந்த் கிஷோர் பேசியதாக கூறப்படும் ஆடியோவில் அவர் பேசியதாவது: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்., மீது மக்களிடையே கடும் அதிருப்தி உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மீது அதிருப்தியில்லை. திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய சர்வேயில் கூட பா.ஜ.,வுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில், மோடிக்கு ஆதரவான அலை, மம்தா கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி மற்றும் அக்கட்சியின் சிறுபான்மை ஆதரவு போக்கு ஆகிய 3 விஷயங்கள் பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது.

மேற்குவங்கத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதே அரசியலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பட்டியலின மக்கள் வாக்குகள் பா.ஜ.,வுக்கு செல்கிறது. மேற்குவங்கத்தில் ஹிந்தி பேசுவோர் ஒரு கோடி பேர் உள்ளனர். இவர்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளனர். மதுவாஸ் சிறுபான்மையினரில் 75 சதவீதம் பேரும், இடதுசாரி ஆதரவாளர்கள் கூட 10 முதல் 15 சதவீதம் பேரும் பா.ஜ., தான் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். 50 முதல் 55 சதவீத ஹிந்துக்களின் ஆதரவு பா.ஜ.,வுக்கு உள்ளது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.


latest tamil newsஇதற்கு பதிலளித்துள்ள பிரசாத் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இந்த ஆடியோவின் ஒரு பகுதியை மட்டும் பா.ஜ., தவறாக பயன்படுத்தியிருக்கிறது. பா.ஜ., தங்கள் தலைவர்களின் வார்த்தைகளை விட, எனது பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி. அவர்கள் தைரியத்துடன் முழுவதையும் வெளியிட வேண்டும். நான் முன்பே கூறியதை இப்போதும் கூறுகிறேன். மேற்குவங்கத்தில் பா.ஜ., இரட்டை இலக்கங்களுக்கு மேல் வெற்றி பெறாது,' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஏப்-202113:04:03 IST Report Abuse
Malick Raja அவர் பேசிய ஆடியோவை திரும்ப கேட்டு உரியதை சொல்வது நற்பண்பில் ஒன்று.. பாஜக நல்லதொரு இலக்கில் இருக்கும் ஆனால் திரிணாமுல் ஆட்சிக்கு வரும் என்றுதான் சொன்னார்.. பாஜக நல்லதொரு இலக்கில் வரும் என்பதை மட்டும் வெளியிடுவதென்பது நல்லதல்ல ..
Rate this:
Gopi - Chennai,இந்தியா
17-ஏப்-202101:02:45 IST Report Abuse
Gopiஅப்படினா அந்த பதினைந்து லட்சம் பேச்சையும் முழுதாய் கேளுங்களேன்...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஏப்-202115:24:15 IST Report Abuse
S.Baliah Seer பிரசாந்த் கிஷோர் எந்தவித தகுதியும் இல்லாமல் செயல்படும் ஒரு புரோக்கர்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
13-ஏப்-202105:41:09 IST Report Abuse
meenakshisundaramஸ்டாலினுக்கு அப்ப ஒண்ணுமே தெரியாமத்தானா இவரை பணிக்கு அமர்த்தினார் -தோல்வி பயம் வந்தவுடனேயே ஆரம்பிச்சுட்டீங்களே எதுக்கும் சம்பளத்துக்கு வேலை பார்த்த கிஷோர் ஸ்டாலினிடம் மிஞ்சிய சம்பளத்தை வாங்கிக்கொண்டு தனது உபகரணங்களுடன் தமிழகத்தை விட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் இல்லேன்னா திமுக காரன் இவரின் அலுவலகத்தை பிரியாணி கடை போல அடிச்சு நொறுக்கிடுவான்...
Rate this:
Gopi - Chennai,இந்தியா
17-ஏப்-202101:04:00 IST Report Abuse
Gopiஇந்த கைசோறு பாப்பானை திராவிட பகுத்தறிவுக்கு நன்றாக பிடிக்கும். பணம் பணத்தோடு சேர்ந்துவிட்டது...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஏப்-202113:08:24 IST Report Abuse
Lion Drsekar வாட்சப்பில் வந்த செய்தி, ஒருவர் திதி கொடுக்க வந்த பண்டிதருக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என்று அதில் ஒருவர் கூறுகிறார் பல கோடி வாங்கிய ஒரே ஒருவர் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X