19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த மியான்மர் ராணுவம்

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
யாங்கன்: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. இதையடுத்து அங்கு தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.ராணுவத்துக்கும் மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆதரவாளர்களுக்கும் நடந்த போராட்டத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம்.
Myanmar, Military, AntiCoup, Protest, Dwindling, மியான்மர், ராணுவம், போராட்டக்காரர்கள், மரண தண்டனை

யாங்கன்: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. இதையடுத்து அங்கு தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.

ராணுவத்துக்கும் மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆதரவாளர்களுக்கும் நடந்த போராட்டத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம். மியான்மர் நாட்டு ராணுவத்துக்கு உலக நாடுகள் பல, கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் தங்கள் நாட்டுக்கு வரத்தடை விதித்தன. இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூக தீர்வு எட்ட வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தின.


latest tamil news



நாளுக்கு நாள் அங்கு வன்முறை போராட்டம் அதிகரித்து வந்த நிலையில் ராணுவத்துக்கு எதிரான புரட்சிகர குழுக்கள் பல, தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. முக்கியத் தலைவர்கள் தற்போது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாகவும் அதன் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.


latest tamil news



யாங்கன் நகரின் வட ஒக்காலப்பா மாவட்டத்தில் கடந்த மார்ச் 27-ம் தேதி இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு திட்டமிட்ட 19 போராட்டக்காரர்களுக்கு தற்போது ராணுவத்தில் அறிவுறுத்தலின் பெயரில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி துவங்கி போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
11-ஏப்-202108:26:08 IST Report Abuse
sankaseshan தலையில்லாத மூர்க்க உஞ்சோலியை முடிக்க ஆலோசனை நடக்கிறது
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஏப்-202106:30:40 IST Report Abuse
தல புராணம் அமீத் சா வரவேற்பு.. இந்தியாவிலும் அப்படி செய்யலாமான்னு மோடியுடன் ஆலோசனை.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
10-ஏப்-202122:22:50 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இந்த செய்திகளெல்லாம் சரி தான்.. ஆனா, அந்த மியான்மர்ல நடக்கறது கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகார அரசுங்கற உண்மையை ஏன் ஒரு பத்திரிக்கையும் எழுதல...??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X