சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.50 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த பெண் தப்பி ஓட்டம்

Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், 50க்கும் மேற்பட்ட பெண்களின் பெயரில், 50 லட்சம் கடன் பெற்று தலைமறைவான பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்தவர் பிரியா, 42. ஜவுளிக்கடை நடத்தினார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக பல பெண்களிடம் கூறினார். மேலும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களின் நகல்களில்
ரூ.50 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த பெண் தப்பி ஓட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், 50க்கும் மேற்பட்ட பெண்களின் பெயரில், 50 லட்சம் கடன் பெற்று தலைமறைவான பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்தவர் பிரியா, 42. ஜவுளிக்கடை நடத்தினார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக பல பெண்களிடம் கூறினார். மேலும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களின் நகல்களில் கையொப்பமிட்டு கொடுத்தால், 1000 ரூபாய் கமிஷன் தருவதாகவும் தெரிவித்தார். இதை நம்பிய, 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல்களை கையொப்பமிட்டு அவரிடம் கொடுத்தனர்.

அதைக்கொண்டு அவர்கள் பெயரில், தனியார் நிறுவனம் ஒன்றில், 50 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற பிரியா, ஜவுளிக்கடையை மூடிவிட்டு, குடும்பத்துடன் தலைமறைவானார். இந்நிலையில் கடனை திரும்ப செலுத்தும்படி நிதி நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட பெண்களிடம் வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று எஸ்.பி., கார்த்திக்கிடம் புகார் அளித்தனர். அவர் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
11-ஏப்-202107:54:44 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN டுமீல் நாட்டில் நானூத்தி இருவது ரொம்ப அதிகம் ஆயிருச்சு
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
11-ஏப்-202107:54:07 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இந்தப்பொழப்புக்கு
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஏப்-202106:58:10 IST Report Abuse
தல புராணம் பிஜேபி மாவட்ட செயலாளர் இவர்.
Rate this:
vijay - coimbatore,இந்தியா
12-ஏப்-202109:11:32 IST Report Abuse
vijayதல புராணம் நீ எப்படிப்பட்ட ஆளு நீ யாரு ஏன் இந்த புனைபெயரில் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கற என்பது தெரியும். தெரிஞ்சா பேசு இல்லாட்டி 200 ரூவா வாங்கிகிட்டு குர்ட்டரை கவுத்துட்டு வேற பொழைப்பை பார் தம்பி...
Rate this:
சொடக்கு சொக்கலிங்கம்..(திமுகவின் முதல் எதிரி) - கீழ்பாக்கம் ,செர்பியா & மொண்டெனேகுரோ
13-ஏப்-202112:27:43 IST Report Abuse
சொடக்கு சொக்கலிங்கம்..(திமுகவின் முதல் எதிரி)தல புராணம் ன்னு சொல்லிட்டு இப்படி ஒரு பதிவை போடுவதற்கு பதிலாக......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X