இளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் பிரிட்டன்

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இளவரசர்கள் ஒருவருமான இளவரசர் பிலிப் தனது 99வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக முன்னதாகக் காலமானார். இதனையடுத்து அவருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்படுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டன் மக்களாட்சிக்கு மாறிவிட்டாலும் இன்னுமும் ஒருகாலத்தை பிரிட்டனை ஆண்ட அரச

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இளவரசர்கள் ஒருவருமான இளவரசர் பிலிப் தனது 99வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக முன்னதாகக் காலமானார். இதனையடுத்து அவருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்படுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.latest tamil newsபிரிட்டன் மக்களாட்சிக்கு மாறிவிட்டாலும் இன்னுமும் ஒருகாலத்தை பிரிட்டனை ஆண்ட அரச குடும்பத்தை மரியாதையுடன் நடத்தி வருகிறது. பிரிட்டன் அரசு, அரசாங்கத்தின் முக்கிய மசோதாக்களை அனுமதிக்க பக்கிங்ஹாம் அரண்மனை மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கையெழுத்திட வேண்டும் என்ற விதி இன்னமும் உள்ளது.

மேலும் அரச குடும்ப வாரிசுகளுக்கு பிரிட்டன் ராணுவத்தில் உயர் பதவிகளும் வழங்கப்படுகின்றன. அவ்வப்போது இளவரசர் வில்லியம், இளவரசர் பிலிப் உள்ளிட்டோர் வெளியுறவுக் கொள்கைகளையும் கவனித்து வந்தனர். நட்பு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இவர்கள் சென்று வருவதும் வழக்கம்.

இளவரசர் பிலிப் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். வயது மூப்பு காரணமாக அவரது உடல் பாகங்கள் தொய்வடைய துவங்கின. பிரிட்டன் வரலாற்றிலேயே அதிக நாட்கள் பதவியில் நீடித்த மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இளவரசர் பிலிப் ஆவார்.

இதனையடுத்து அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு கட்டடங்களில் உள்ள பிரிட்டன் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் இடம் மற்றும் தேதி இன்னும் சரியாக அறிவிக்கப்படாத நிலையில், 40 நிமிடங்களுக்கு நிமிடத்துக்கு ஒரு ரவுண்ட் துப்பாக்கிச்சூடு என்கிற கணக்கில் 40 முறை துப்பாக்கிகள் விண்ணை நோக்கி சுடப்பட்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் கால்பந்து அமைப்பு இளவரசர் பிலிப்புக்கு மரியாதை செய்ய உள்ளது. பிபிசி உள்ளிட்ட பல முன்னணி பிரிட்டன் ஊடகங்கள் அவரது இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்ப உள்ளன. பிரபல பிரிட்டன் செய்தி இதழான 'தி சன்' தனது தலையங்கத்தில் 'உங்களுடன் சேர்ந்து நாங்களும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம்' என்று ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றன.


latest tamil newsடெய்லி மெயில் உள்ளிட்ட பல பத்திரிகைகள் இளவரசர் பிலிப் குறித்தும் அவரது வாழ்க்கை சாதனைகள் குறித்தும் விரிவான கட்டுரைகள் எழுதத் துவங்கி விட்டன. பொது இடங்களில் குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை இளவரசர் பிலிப்புக்கு மலர்வளையம் மற்றும் மலர்கொத்து வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். வின்சர் கேசில் அரண்மனையில் உள்ள புனித ஜார்ஜ் சேப்பல் பகுதியில் இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஏப்-202107:54:53 IST Report Abuse
Natarajan Ramanathan 99 வயசு கிழம் எல்லாம் இளவரசர் என்றால் 70 வயது சார்லஸ் என்னவாம்?
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
11-ஏப்-202107:18:29 IST Report Abuse
Raman சதுரங்கத்தில் ராஜாவுக்கு தான் பவர் இல்லையே ? அவர் ராஜாவாக இருந்தாலும் சரி இளவரசராக இருந்தாலும் சரி, அவர் நம்ம நாட்டு அதிபர் மாதிரி தான் ஹி ஹி ஹி மற்றபடி நல்ல மனிதர்
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
11-ஏப்-202106:00:39 IST Report Abuse
Sanny எப்படிப்பார்த்தாலும் அரச மரியாதையுடன் தான் அடக்கம் செய்யப்படும், பிறகு அதென்ன குண்டுகள் முழங்க, அது, இது என்று சொல்லி குழப்புகிறார்களென்று புரியவில்லையே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X