அமெரிக்காவில் இந்திய தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு

Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை:அமெரிக்காவில், தங்கள் பெண் குழந்தையுடன் வசித்து வந்த இந்திய தம் பதி, மர்மமான முறையில் உயிரிழந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி ருத்ராவர், 32, ஆரத்தி, 30, என்ற பெண்ணை, 2014ல் திருமணம் செய்தார். இருவரும், 2015ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு, தகவல் தொழில்நுட்ப துறையில் பாலாஜி பணியாற்றி வந்தார்.
 அமெரிக்காவில் இந்திய தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு

மும்பை:அமெரிக்காவில், தங்கள் பெண் குழந்தையுடன் வசித்து வந்த இந்திய தம் பதி, மர்மமான முறையில் உயிரிழந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி ருத்ராவர், 32, ஆரத்தி, 30, என்ற பெண்ணை, 2014ல் திருமணம் செய்தார். இருவரும், 2015ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு, தகவல் தொழில்நுட்ப துறையில் பாலாஜி பணியாற்றி வந்தார். வடக்கு ஆர்லிங்டன் பகுதியில், 15 ஆயிரம் பேர் வசிக்கும் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், தங்கள், 4 வயது பெண் குழந்தையுடன் அவர்கள் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த, 7ம் தேதி, அந்த தம்பதி, மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்தனர். இருவரின் உடலிலும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இருவரும், ஒருவருக்கொருவர் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து, மும்பையில் வசிக்கும் பாலாஜியின் தந்தை பரத் ருத்ராவர் கூறிய தாவது: சம்பவம் நடந்த தினத் தன்று, என் பேத்தி, வீட்டு பால்கனியில் நின்று அழுது இருக்கிறார். அவளது அழுகுரலை கேட்டு, அக்கம் பக்கத்தினர், போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, என் மகன் மற்றும் மருமகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

என் மருமகள், ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தார். அவர்களுக்கு இடையே எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர். இதில் ஏதோ சூழ்ச்சி நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
11-ஏப்-202107:53:28 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN உண்மை வெளிவருவது கடினம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X