புதுக்கட்சி துவக்குகிறார் ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளா

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
ஐதராபாத் ; ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஷர்மிளா,47 ஜூலை 8-ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி துவக்க போவதாக தெரிவித்துள்ளார். ஆந்திரா முன்னாள் காங்.,முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், அவரது மகன் ஜெகன் மோகன்ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து, ஒய்.எஸ்.ஆர்., - காங்., என்ற புதிய கட்சியை துவக்கினார். 2019ல் பார்லி. லோக்சபா தேர்தலுடன்
புதுக்கட்சி, ஜெகன் மோகன்,ஷர்மிளா

ஐதராபாத் ; ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஷர்மிளா,47 ஜூலை 8-ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி துவக்க போவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திரா முன்னாள் காங்.,முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், அவரது மகன் ஜெகன் மோகன்ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து, ஒய்.எஸ்.ஆர்., - காங்., என்ற புதிய கட்சியை துவக்கினார். 2019ல் பார்லி. லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் நடந்த தேர்தலில், ஓய்.எஸ்.ஆர். கட்சி பெரும்பான்மை பெற்றது. ஜெகன் மோகன் முதல்வரானார். அந்த தேர்தலில், ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா, 47 தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் .


latest tamil news


+

இதையடுத்து ஷர்மிளா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி துவங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ஷர்மிளா தலைமையில் நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை கூட்டி கட்சி பெயரை அறிவிக்க ஷர்மிளா திட்டமிட்டிருந்தார். தெலுங்கானாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகி வருவதால், விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சி துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஜூலை 8-ம் தேதி தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாள் என்பதால் அன்று புது கட்சி துவங்குவது உறுதி எனவும், கட்சியின் பெயர் கொடி , கட்சி கொள்கை ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக ஷர்மிளா தெரிவித்தார். 2023-ல் தெலுங்கானா சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு போட்டியாக தனது கட்சியை வளர்த்திட ஷர்மிளா வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-ஏப்-202116:37:10 IST Report Abuse
J.V. Iyer குடும்பத்தில் சொத்து பங்கு சண்டை வேறு என்ன? என்ன இருந்தாலும் குடும்ப முன்னேற்ற கட்சி போல ஆகுமா?
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
11-ஏப்-202115:50:50 IST Report Abuse
Shekar இந்த விளையாட்டு நல்லாயிருக்கே..... ஆந்திர உனக்கு தெலுங்கானா எனக்கு, எனக்கு கிடைப்பதில் நீ பங்கு கேட்கப்படாது, உனக்கு கிடைப்பதில் நான் கேட்கமாட்டேன் ஓகேவா....அட தேவுடா...
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
11-ஏப்-202114:49:39 IST Report Abuse
Thirumal Kumaresan எல்லோருமே பாரதீய ஜனதா வுக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் ஹிந்துமதம் சீக்கிரமா அழிவை நோக்கி நகரும். நமது கலாச்சாரங்கள் முற்றிலும் அளிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X