பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 10, 2021
Share
Advertisement
ஏப்., 11, 2020சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே உள்ள கோட்டையூரில், 1935 செப்., 1ம் தேதி பிறந்தவர், அய்க்கண். இயற்பெயர், அய்யாக்கண்ணு.திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லுாரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணி புரிந்தார். சிறுகதை, நாவல், நாடகம் என, எழுத்தின் பல்வேறு தளங்களில் இயங்கினார். 40 சிறுகதைத் தொகுப்புகள், 19 நாவல்கள், ஆறு வரலாற்று நாவல்கள், 11 நாடகங்கள், 14


இதே நாளில் அன்று


ஏப்., 11, 2020



சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே உள்ள கோட்டையூரில், 1935 செப்., 1ம் தேதி பிறந்தவர், அய்க்கண். இயற்பெயர், அய்யாக்கண்ணு.திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லுாரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணி புரிந்தார். சிறுகதை, நாவல், நாடகம் என, எழுத்தின் பல்வேறு தளங்களில் இயங்கினார். 40 சிறுகதைத் தொகுப்புகள், 19 நாவல்கள், ஆறு வரலாற்று நாவல்கள், 11 நாடகங்கள், 14 கட்டுரைத் தொகுப்புகள் என, இவரது படைப்புகள், 90 புத்தகங்களாக
வெளிவந்துள்ளன. தமிழக அரசு, சிறந்த, 16 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, ஆங்கிலம் உள்ளிட்ட, 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அதில் இவரது கதையும் இடம் பெற்றுள்ளது.இவர் எழுதிய நாடகம், 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இவரின், 'மண்' எனும் சிறுகதை, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இடம்பெற்றது.
தமிழக அரசின், 'அண்ணா' விருது உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 2020 ஏப்., 11ம் தேதி, தன், 84வது வயதில் இயற்கை எய்தினார்.எழுத்தாளர் அய்க்கண், காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X