அரசியல் செய்தி

தமிழ்நாடு

உரம் விலை உயர்வு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:உரம் விலை உயர்வுக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அதன் விபரம்:ஸ்டாலின், தி.மு.க., தலைவர் விவசாயிகளின் வயிற்றில், வெந்நீர் ஊற்றும் வகையில், உரம் விலை, 58 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 கிலோ டி.ஏ.பி., உர மூட்டை விலை, 1,200ல் இருந்து, 1,900 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். சென்னையில் செயல்பட்டு வந்த, அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு
  உரம் விலை உயர்வு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

சென்னை:உரம் விலை உயர்வுக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன் விபரம்:


ஸ்டாலின், தி.மு.க., தலைவர்விவசாயிகளின் வயிற்றில், வெந்நீர் ஊற்றும் வகையில், உரம் விலை, 58 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 கிலோ டி.ஏ.பி., உர மூட்டை விலை, 1,200ல் இருந்து, 1,900 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். சென்னையில் செயல்பட்டு வந்த, அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை, அராஜகமாக கலைத்துள்ளனர். மத்திய பா.ஜ., அரசின் செயலை கண்டிக்கிறேன்.விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து, உரவிலை உயர்வு இப்போதைக்கு கிடையாது என, ஒப்புக்கு ஒரு அறிவிப்பை, மத்திய பா.ஜ., அரசு வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க தேர்தல் முடிந்ததும், இந்த விலையேற்றத்தை செயல்படுத்துவதற்கான ஒத்திகை இது.இன்னொருபுறம், அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்து, தமிழகத்திற்கு மறக்க முடியாத துரோகம் செய்துள்ள, மத்திய பா.ஜ., அரசை, விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.


அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

மத்திய அரசு, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால், உரங்களின் விலை, மூட்டைக்கு, 700 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. உடனடியாக, உரங்களின் விலையை குறைக்க வேண்டும். இல்லையென்றால், மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.


வைகோ, ம.தி.மு.க., பொதுச்செயலர்

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே, வாடிக்கையாக கொண்டிருக்கும், மத்திய பா.ஜ., அரசு, உரம் விலைகளை உயர்த்தி இருப்பது, வன்மையான கண்டனத்துக்குரியது. உடனடியாக, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.அதேபோல, மத்திய அரசு பிறப்பித்துள்ள, மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களை கலைக்கும், அவசர சட்டத்தை, திரும்பப் பெற வேண்டும்.

சென்னையில், வாஜ்பாய் அரசால் திறக்கப்பட்ட, அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமையகம், தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
12-ஏப்-202103:42:32 IST Report Abuse
NicoleThomson யோப் நீ சொன்ன அத்துணை செயற்கை உரங்களும் துண்டுசீட்டுக்களை போல தான் என்பதால் இவ்ளோ சப்போர்ட் ஆ ஸ்டாலின் சார் , இயற்க்கைக்கு மாறுங்க என்று நம்மாழ்வார் ஐயாவும் மற்றையோர்களும் கரடியா கத்துனாங்களே என்ன பண்ணுறீங்க நீங்க எல்லாம்? அது சரி ஏன் விவசாயிகளுக்கு என்று ஒரு ப்ரோக்ராம் கூட இல்லாத உனது கார்பொரேட் சேனல்களில் எப்போது தான் இடம் கொடுப்பாய்?
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
11-ஏப்-202115:39:11 IST Report Abuse
Baskar இதுவே இவனுடைய கடைசி கண்டன அறிக்கையாக இருக்கும். வயது முப்பு காரணமாக ஓய்வு பெற வேண்டிய வயது அதனால் இனி பொது நிகட்சிகளிலும் அரசியலில் இருந்தும் ஸ்டாலின் விடை பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
11-ஏப்-202118:02:24 IST Report Abuse
Apposthalan samlinஉரம் என்றால் என்னது என்று தெரியாமல் கூவ கூடாது...
Rate this:
Cancel
சிவ.இளங்கோவன் . - முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
11-ஏப்-202113:59:28 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . எதிர்க்கட்சி இல்லை .. விரைவில் முதல்வர் .. ஆகவே ஊடகங்கள் இன்னும் 20 நாட்களுக்கு எதுவேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X