பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை காங்., முதல்வர்கள் புகார்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அந்த மாநிலங்களின் முதல்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து, காங்., ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள காங்., அமைச்சர்களுடன், காங்., தலைவர் சோனியா, நேற்று ஆலோசனை நடத்தினார். பொறுப்பு'வீடியோ கான்பரன்சிங்' முறையில் நடந்த
தடுப்பூசி,  பற்றாக்குறை, காங்., முதல்வர்கள் புகார்

புதுடில்லி:காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அந்த மாநிலங்களின் முதல்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து, காங்., ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள காங்., அமைச்சர்களுடன், காங்., தலைவர் சோனியா, நேற்று ஆலோசனை நடத்தினார். பொறுப்பு'வீடியோ கான்பரன்சிங்' முறையில் நடந்த இந்த கூட்டத்தில், முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெல் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், சோனியா பேசியதாவது:மக்கள் அதிக அளவில் கூடுவதே, வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நம் அரசியல் சுயநலத்தை விட, நாட்டின் நலனே முக்கியம் என்பதை உணர வேண்டும். இதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

மத ரீதியிலான நிகழ்ச்சிகள், தேர்தல் பிரசார கூட்டங்கள் என, மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க, வேண்டும்.முதலில் நம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க வேண்டும். அதன்பின், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது, பரிசாக அளிப்பதை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


ஐந்து நாட்கள்

இது குறித்து, காங்., செய்தி தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக, காங்., ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டத்தில் தெரிவித்தனர். பஞ்சாபில், ஐந்து நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி உள்ளதாக, அமரீந்தர் சிங் கூறினார். சத்தீஸ்கரில், மூன்று நாட்களுக்கே தடுப்பூசி உள்ளதாக, பாஹெல் குறிப்பிட்டார்.

தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என, அசோக் கெலாட் குறிப்பிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.


எச்சரிக்கை தேவை!

உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து, மத்திய அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காங்., கட்சியை எதிரியாக பார்க்காமல், காங்., ஆளும் மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.ராகுல், லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
11-ஏப்-202108:03:04 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN வீணடித்த மராட்டிய அரசிடம் கேளுங்கள்
Rate this:
11-ஏப்-202122:50:14 IST Report Abuse
ஆப்புஅறிவுக்கொழுந்து நடேசன். மகாராஷ்டிரா வுக்கு குடுக்கப்பட்ட தடுப்பூசி 1.06 கோடி டோஸ்கள். போடப்பட்டவை 96 லட்சம் டோஸ்கள். சேதாரம் சுமார் 5 லட்சம் டோஸ்கள். அதாவது சுமார் 5 சதவீதம். இதுதான் இந்தியாவின் சராசரி வேஸ்ட். ஜாவ்டேகர்தான் அரசியல் காரணங்களுக்காக இப்பிடி பொய்த்தகவல் பரப்புராருன்னா, நீயும் அமெரிக்காவுலேருந்து வந்துட்டியே. அது சரி, ஜான்சன் அண்ட் ஜான்சன் சமீபத்துல அமெரிக்காவுல 15 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை வீணடிச்சு தூக்கி கொட்டியதை படிச்சியா? போய் அதைப் படி....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
11-ஏப்-202107:43:56 IST Report Abuse
Darmavan இதிலும் அரசியல்.இந்த காங்கிரஸ் அரசுகள். தடுப்பூசியை வீணாக்கிவிட்டு கள்ள சந்தையில் தனியார் மருத்துவர்களுக்கு விற்றுக்கொள்ளை அடித்துவிட்டு மத்திய அரசின் மீது பழி போடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X