பிரசாந்த் கிஷோர் 'ஆடியோ' திரிணமுல் காங்., கலக்கம்

Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'மேற்கு வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெறும்' என பிரசாந்த் கிஷோர் கூறும், 'ஆடியோ' வெளியானதால், திரிணமுல் காங்., கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இங்கு, முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சிக்கு, தேர்தல் வியூகங்களை, 'ஐபேக்' நிறுவனர் பிரசாந்த் கிஷோர்
 பிரசாந்த் கிஷோர் 'ஆடியோ' திரிணமுல் காங்., கலக்கம்

புதுடில்லி:'மேற்கு வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெறும்' என பிரசாந்த் கிஷோர் கூறும், 'ஆடியோ' வெளியானதால், திரிணமுல் காங்., கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இங்கு, முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சிக்கு, தேர்தல் வியூகங்களை, 'ஐபேக்' நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.


சர்ச்சை

இந்நிலையில், பா.ஜ.,வின் அமித் மால்வியா, நேற்று வெளியிட்ட பிரசாந்த் கிஷோரின் 'ஆடியோ' பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.'கிளப் ஹவுஸ்' செயலி வாயிலாக பேசிய பிரசாந்த் கிஷோர், அதில் கூறி இருந்ததாவது:

மேற்கு வங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமானவர். அவருக்காகவே, ஓட்டுகள் கிடைக்கும். இங்கு, ஹிந்தி பேசும் மக்கள், ஒரு கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். தலித் மக்கள், 27 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளனர். ஹிந்து மக்கள், 50 - 55 சதவீதம் பேர், பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பர்.

மத்துவா சமூக மக்களும், பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பர். நாங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில், மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி அமையும் என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருந்தது. மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக, மக்கள் கோபத்தில் உள்ளனர்.இவ்வாறு, அதில் அவர் கூறி இருந்தார்.

இந்த ஆடியோவை வெளியிட்ட அமித் மால்வியா, “இது, தனிப்பட்ட உரையாடல் இல்லை என்பதை உணராமல், பிரசாந்த் கிஷோர் அதிகமாக பேசிவிட்டார்,” என, குறிப்பிட்டு விமர்சித்தார்.பிரசாந்த் கிஷோரின் இந்த ஆடியோ, திரிணமுல் காங்., கட்சியினரிடையே கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


முழு உரையாடல்

இதற்கு பதிலளித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:தன் சொந்த தலைவர்களின் வார்த்தைகளைக் காட்டிலும், என் கிளப் ஹவுஸ் உரையாடலை பெரிய விஷயமாக, பா.ஜ., வினர் எடுத்துக்கொள்வதை நினைத்து, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என் உரையாடலை திரித்து, அதில் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வெட்டி வெளியிட்டவர்கள், தைரியத்துடன், என் முழு உரையாடலையும் வெளியிடவேண்டும். நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்; இப்போது மீண்டும் கூறுகிறேன். மேற்கு வங்கத்தில், பா.ஜ., 100 இடங்களை தாண்டாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஏப்-202119:34:36 IST Report Abuse
Endrum Indian பி ஜெ பி மூன்றே மூன்று சீட் இருந்தது இப்போது 100 என்று சொன்னாலே போதுமே முஸ்லீம் பேகம் மும்தாஜுக்கு கிறுக்கு பிடித்து உளர ஆரம்பித்து விடுவாள்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
11-ஏப்-202111:17:36 IST Report Abuse
sankar இங்கேயும் சுடலைக்கு ஒரே பிற்போக்குதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X