சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

தோல்விகளால் பெண்கள் துவளக் கூடாது!

Added : ஏப் 10, 2021
Share
Advertisement
தோல்விகளால் பெண்கள் துவளக் கூடாது!இளம் வயதில், வாழ்வில் பல சோதனைகளை சந்தித்த பின், தேசிய அளவில், 'பவர் லிப்டிங்' விளையாட்டு போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பற்றி ஏக்தா கபூர்: உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எனக்கு, இப்போது, 32 வயதாகிறது. பெண்ணாக நான் பிறந்ததால், அப்பாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிறு வயதிலேயே அம்மா எங்களை பிரிந்து சென்று விட்டார். அப்பா
சொல்கிறார்கள்

தோல்விகளால் பெண்கள் துவளக் கூடாது!

இளம் வயதில், வாழ்வில் பல சோதனைகளை சந்தித்த பின், தேசிய அளவில், 'பவர் லிப்டிங்' விளையாட்டு போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பற்றி ஏக்தா கபூர்: உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எனக்கு, இப்போது, 32 வயதாகிறது. பெண்ணாக நான் பிறந்ததால், அப்பாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிறு வயதிலேயே அம்மா எங்களை பிரிந்து சென்று விட்டார். அப்பா தான் எனக்கு, அம்மா போல இருந்தார்.
தனியார் பள்ளி ஆசிரியரான அவர், என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். இளம் வயதில் என்னை வளர்க்க அவர் பட்ட சிரமங்களைப் பார்த்த என் உறவினர்கள், 'குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்த்து விடு அல்லது யாருக்காவது தத்து கொடுத்து விடு' என்றனர். அதைக் கேட்காமல், என்னை மிகுந்த அன்புடன் வளர்த்து, ஆளாக்கினார்.அவரின் சிரமத்தை குறைக்கும் விதமாக, 18 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அதற்குப் பின், என் கணவர், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது அறிந்து, மிகுந்த வேதனை அடைந்து, விவாகரத்து பெற முயற்சித்தேன்; அப்பா முதலில் விடவில்லை. குழந்தை பிறந்த பின், கணவரிடம் இருந்து பிரிந்து, அப்பாவுடன் இருந்து விட்டேன். எத்தனை காலம் தான், அப்பாவுக்கு பாரமாக இருப்பது என்றெண்ணி, குழந்தையை அவரிடம் விட்டு, நான் டில்லி சென்று, தனியாளாக வாழத் துவங்கினேன். அந்த நேரத்தில், சிறு வயதில், விளையாட்டில் எனக்கு இருந்த ஆர்வம் கைகொடுத்தது. குத்துச்சண்டை மற்றும் உடல் வலுவை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை செய்யத் துவங்கினேன். நல்ல உடல் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். நல்ல வலுவான உடல் வாகு பெற்றதும், பவர் லிப்டிங் பயிற்சிகளில் தேர்ச்சி அடைந்து, பல சர்வதேச விருதுகளை பெறத் துவங்கினேன்.சமீபத்தில் தேசிய அளவில் நடந்த போட்டியில், தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றேன். இந்த, 32 வயதுக்குள், வாழ்க்கையில் பல விதமான துன்பங்களை அனுபவித்த நான், மூன்று முறை தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்து பிழைத்து கொண்டேன்.அது தவறு என உணர்ந்து, இப்போது என்னைப் போல உள்ள பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறேன். உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் நகரில், நவீன, உடல் கட்டமைப்பு கூடம் எனப்படும், ஜிம் நடத்தி வருகிறேன்.என்னை போல பல பெண்கள் வாழ்க்கையில் பல விதமான சோதனைகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்து வருகின்றனர். சோதனைகளை கண்டு அவர்கள் துவண்டுவிடாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். சந்தோஷமாக வாழ பல வழிகள் உள்ளன. அவற்றை நாம் தான் கண்டறிய வேண்டும். இதை வலியுறுத்த, பெண்களிடம், என் வாழ்க்கை கதையை கூறி, தோல்விகளுக்கு துவண்டு போகாமல், தொடர்ந்து போராட ஊக்க சக்தியாக
விளங்குகிறேன்!


சிறுதானியத்தை விவசாயிகளிடம் ஊக்குவிக்கிறேன்!



விவசாயிகளிடையே சிறுதானிய சாகுபடியை அதிகப்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறித்து, ஆந்திரா, சித்துார் மாவட்டம், முல்லுார் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த, விசாலா ரெட்டி உய்யலா: வட மாநிலங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, பால் பொருட்கள் தயாரிப்பில், நாட்டிலேயே முதன்மை நிறுவனமாக செயல்படும், 'அமுல்' போல, விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களை சிறுதானியங்கள் விளைவிக்கச் செய்து, சிறுதானிய வங்கியை துவக்க வேண்டும் என்பது என் ஆசை.இதற்கான பல விதமான யோசனைகள், முன்கள பயிற்சிக்குப் பின், 'ஐடென்சிடி' என்ற நிறுவனத்தை, கடந்த ஆண்டு துவக்கினேன்.சிறுதானியங்களை பயிரிட விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதோடு, விளைச்சலுக்கு சரியான விலை நிர்ணயித்து, அவற்றை வாங்கி, விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் பணம் அளித்து, அவர்களின் தேவைகளை நிறைவு செய்வது தான் இந்த அமைப்பின் நோக்கம்.இந்த அமைப்பின் மூலம், விவசாயிகளை நேரடியாக சந்தித்து, எந்தெந்த பருவத்தில், என்னென்ன சிறுதானியங்களை பயிரிடலாம்; நோயிலிருந்து அவற்றை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினேன். துவக்கத்தில் சில விவசாயிகள் மட்டுமே இவரின் நிறுவனத்தில் இணைந்தனர்; சிலர் மட்டுமே இவரின் பிரசாரத்தை ஏற்றுக் கொண்டனர். எனினும் தொடர்ந்து இவர் மேற்கொண்ட முயற்சிகளால், இப்போது, 60 கிராமங்களில், 2,000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இவருடன் இணைந்து, சிறுதானிய வங்கியில் சிறுதானியங்களை வழங்குகின்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் லாபம் கிடைக்கிறது.இளம்பெண்ணான, தான் மட்டும் சொல்வதை, அனுபவம் வாய்ந்த விவசாயிகள் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், அனுபவம் வாய்ந்த விவசாயிகள் சிலரை பணியில் அமர்த்தி, அவர்கள் மூலம், சிறுதானிய விளைச்சல் மற்றும் வங்கி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதனால், 15 ஆண்டுகளுக்கு முன், விவசாயத்தை புறக்கணித்து, பட்டுப்பூச்சி வளர்ப்பில் ஈடுபட்ட ஏராளமான விவசாயிகள், இப்போது மீண்டும் விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். இயற்கைச் சீற்றத்தால் பயிர்கள் அழியும் போது, அதற்கான இழப்பீடு பெறுவது; அதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சீர் செய்ய, என்ன பயிரை செய்வது என்பது போன்ற அறிவியல்பூர்வமான எனது அறிவுரைகள், எங்கள் பகுதி விவசாயிகளை ஈர்த்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க, அனைவராலும் பாராட்டப்படும் விஷயம் என்னவென்றால் பெண்களும், இளைஞர்களும் என் அறிவுரையை கேட்டு, விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது தான்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X