தனியார் துறை நிபுணர்களுக்கு வாய்ப்பு :பிரதமர் மோடி அதிரடி

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி, அரசு துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். அரசு துறைகளில், தனியார் துறை நிபுணர்களுக்கு வாய்ப்பு வழங்கும் அவரது முயற்சி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.'சிவில் சர்வீஸ்' துறையில், பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு சீர் திருத்தங்களை செய்து வருகிறார். பிரதமர் மோடியை தவிர வேறு யாரும், இந்த துறையை, இவ்வளவு
தனியார் ,நிபுணர்கள், அரசு துறை, மோடி அதிரடி

பிரதமர் நரேந்திர மோடி, அரசு துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். அரசு துறைகளில், தனியார் துறை நிபுணர்களுக்கு வாய்ப்பு வழங்கும் அவரது முயற்சி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.'சிவில் சர்வீஸ்' துறையில், பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு சீர் திருத்தங்களை செய்து வருகிறார்.

பிரதமர் மோடியை தவிர வேறு யாரும், இந்த துறையை, இவ்வளவு சோதனைக்கு உட்படுத்தியது இல்லை.அரசு அமைப்புகளின் கட்டமைப்பை, ஊழல்மிக்க அதிகாரிகள் சிதைத்து வருவதை உணர்ந்து, அதுபோன்ற, 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பணியில் இருந்து நீக்கப்பட்டும், கட்டாய ஓய்வு வழங்கப்பட்டும் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஒப்புதல்

இதைத்தவிர, ஐ.ஏ.எஸ்., பிரிவிலும், பிரதமர் மோடி, சில மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த, 2019ல், லோக்சபா தேர்தலுக்காக, பா.ஜ., சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இந்த நடவடிக்கைகளை, பிரதமர் எடுத்து வருகிறார். அந்த தேர்தல் அறிக்கையில், 'இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை' என்ற கொள்கையில் நாம் பணியாற்ற வேண்டும். இதை செய்துகாட்ட, சிவில் சர்வீஸ் பிரிவில் பல சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.அதன்படி, 2020 செப்டம்பரில், திறன் மேம்பாட்டு ஆணையம் அமைப்பதற்கு, அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமர் ஒப்புதல் அளித்தார்.

வருடாந்திர திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும், பிரதமரின் பொது மனித வள கவுன்சிலுக்கு உதவுதல், சிவில் சர்வீஸ் பிரிவில் திறன் மேம்பாட்டை கையாளும் அனைத்து மத்திய பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில், இந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை தரப்படுத்துவதற்கு பரிந்துரைகள் வழங்குவதற்கும், இந்த ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.கடந்த ஏப்ரல், 1ம் தேதி, திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக, கியூ.சி.ஐ., எனப்படும் இந்திய தர கவுன்சிலின் தலைவர் ஆதில் ஜைனுல்பாய் நியமிக்கப்பட்டார்.


முதன்முறை அல்லஅதே நாளன்று, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும், பி.இ.எஸ்.பி., எனப்படும், 'பப்ளிக் என்டர்பிரைசஸ் செலக்ஷன் போர்டு' வாரியத்தின் தலைவராக, மல்லிகா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டார். இவர், டிராக்டர்களை தயாரிக்கும், 'டாபே' நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியத்தின் தலைவராக, தனியார் துறை நிபுணர் நியமிக்கப்பட்டிருப்பது, இதுவே முதன்முறை. இதுபோன்ற தனித்துவமான நடவடிக்கைகளை, பிரதமர் மோடி எடுப்பது, இது முதன்முறை அல்ல. கடந்த, 2019ம் ஆண்டு ஏப்ரலில், முதல்முறையாக, தனியார் துறை நிபுணர்கள் ஒன்பது பேர், மத்திய அரசு துறைகளில், இணை செயலர்களாக நியமிக்கப்பட்டனர்.

விமான போக்குவரத்து துறைக்கு அம்பர் துபே; வர்த்தக துறைக்கு அருண் கோயல்; பொருளாதார விவகார பிரிவுக்கு ராஜீவ் சக்சேனா உள்ளிட்டோர் இணைச் செயலர்களாக நியமிக்கப்பட்டனர். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை செயலராக சுமன் பிரசாத் சிங்; கப்பல் துறைக்கு பூஷன் குமால்; வேளாண் மற்றும் விவசாய நலத் துறைக்கு, கொகோலி கோஷும் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கியவர்கள். நம் நாடு எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தில் வைத்து, அரசு துறைகளில் தனியார் துறை நிபுணர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பிரதமர் மோடியின் இந்த முயற்சி, அனைவரது வரவேற்பையும் பெற்று உள்ளது. - நமது சிறப்பு நிருபர் -Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஏப்-202123:57:25 IST Report Abuse
தல புராணம் Lateral entry without across the board reforms including transparent political funding will only lead to corrupt appointments. குறுக்குவழியில் தனியார் "வல்லுநர்களை" நியமிப்பதற்கு முன், அடிப்படை "ஆங்கிலேய" அடிமைத்தன நிர்வாக முறையை மாற்றியமைப்பதும், குறிப்பாக தேர்தல் நிதி பாத்திரம் என்ற பெயரில் ஆளும்கட்சிக்கு லஞ்சம் தருவதை சட்டம் போட்டு மறைப்பதை நிறுத்தி வெட்டவெளிச்சமாக்குவதும் மிக மிக அவசியம். இல்லையென்றால் பெட்ரோலியம், ரசாயன இழைகள், மொபைல்போன் இறக்குமதி, ராணுவ தளவாட இறக்குமதிக்கு அம்பானியின் அடிபொடிகளும், துறைமுகம், சூரிய மின்திட்டங்கள், நிலக்கரி சுரங்கம் இவைகளுக்கு அதானிகளும், வேதாந்தாக்களும் அதிகாரம் நிறைந்த JOINT SECRETARY பதவியில் இருந்து கொண்டு சட்டத்தை அவர்களுக்காக மாற்றியமைத்து கொள்வார்கள். எந்த "திறமையின்" அடிப்படையில், யாரால் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்? அவர்கள் ஏன் தனியார் துறையில் இருந்து வரவேண்டும்? ஏன் ஊழலில்லாத நாடுகளில் இருந்து அந்நாட்டு அதிகாரிகளை (DEPUTATION) பிரதிநிதித்துவ முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் கொண்டுவரக்கூடாது? உதாரணத்துக்கு சிங்கப்பூர், சுவீடன், ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி என்று, அவர்கள் நாட்டுடன் நடக்கும் பெரும் திட்டங்களில் இருந்து பல்வேறு துறைகளில் அவர்களை பணியமர்த்தலாமே? அதை செய்யாது இந்த மோசடி தர்பார் கூட்டம். தேர்தல் பத்திர நிதி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு "நன்கொடை" என்ற பெயரில் தரப்படும் சட்டபூர்வமான லஞ்சம் இவைகளில் 100% வெளிப்படைத்தன்மை கொண்டுவராத பட்சத்தில், Government Of the People, By the People, For the People என்பதை மாற்றி, BJP Government Of the People, By Modi's Friends, For Modi's Friends என்று மாற்றியமைக்கும் திட்டம் தான் இது. சில்லறை விற்பனை முடிந்து மொத்தமாக ஆட்சி கட்டமைப்பையே தனியாருக்கு தாரை வார்க்கிறது இந்த அரசு.
Rate this:
Cancel
11-ஏப்-202122:32:34 IST Report Abuse
ஆப்பு பிரதமர் பதவிக்கும்.ஒரு தனியாரைப் போட்டுட்டு இவர் ஒதுங்கிக் கொள்ளலாமே....
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
11-ஏப்-202120:18:33 IST Report Abuse
தமிழ்வேள் அரசின் வேலை நிர்வாகம் ...தனியாரின் வேலை பெரும்பாலும் உற்பத்தி மற்றும் சேல்ஸ் ...அப்படி இருக்க தனியார் அதிகாரி அரசுக்கு வந்து எந்த வேலையை செய்வான் .....நில நிர்வாக தாசில்தார் , பேரிடர் தடுப்பு துறை வருவாய் துறை அதிகாரி அலுவலர்களை மியூச்சுவல் பண்டும் இன்சூரன்சும் விற்க சொல்வான் ...கிராம நிர்வாக அலுவலர்களுக்கு , ரேஷன் கடை விறபனைக்கு டார்கெட் கொடுப்பான் ....இதுதான் நடக்கும் ....ஐ ஏ எஸ் அதிகாரி என்பவர் அரசின் அனைத்து துறைகளிலும் பயிற்சி முடித்தவர் .....இரண்டாண்டு பயிற்சியில் , வி ஏ ஓ ஓடு இரண்டு மாதம், ஆர் ஐ யோடு ஒரு மாதம் , தாசில் தாரோடு இரண்டு மாதம் , கருவூலத்தில் ஒரு மாதம் டிஎஸ்பி ஓடு இரு மாதம், செஷன்ஸ் நீதிபதியோடு ஒரு மாதம் என்று பயிற்சி மட்டும் பனிக்கால உற்றுநோக்கல் , தேர்வு முடித்தவர் ...தனியார் அதிகாரி எதை முடித்தான் ? அவனது கம்பெனி விதிகள் கூட ஒழுங்காக தெரியாது ......துறை தேர்வு என்று ஒன்று தெரியவே தெரியாது .... வேஸ்ட் நியமனங்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X