பிச்சை எடுப்பது குற்றமா: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி :பிச்சை எடுப்பதை கிரிமினல் குற்றமாக கருதப்படும் சட்டத்தை ரத்து செய்வது பற்றி, மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என பஞ்சாப், மஹாராஷ்டிரா, குஜராத், பீஹார், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. சில மாநிலங்களில், பிச்சை எடுப்பதற்கு சிறை தண்டனையும்,
பிச்சை , குற்றமா, அரசு, சுப்ரீம் கோர்ட் கெடு

புதுடில்லி :பிச்சை எடுப்பதை கிரிமினல் குற்றமாக கருதப்படும் சட்டத்தை ரத்து செய்வது பற்றி, மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என பஞ்சாப், மஹாராஷ்டிரா, குஜராத், பீஹார், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன.

சில மாநிலங்களில், பிச்சை எடுப்பதற்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது.

டில்லியில் இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமல்ல' என, டில்லி உயர் நீதி மன்றம், 2018ல் தீர்ப்பளித்தது.இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:

யாரும் விரும்பி, பிச்சை எடுப்பதில்லை. மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால், வேறு வழியின்றி, அவர்கள் இதை செய்கின்றனர். இதை, கிரிமினல் குற்றமாக கருதுவது, அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை தருகிறது. பிச்சை எடுப்பதை, கிரிமினல் குற்றமாக கூறும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக, மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும், பிப்ரவரியில், 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: பிச்சை எடுப்பதை, கிரிமினல் குற்றமாக கருதப்படும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற விவகாரம் தொடர்பாக, விளக்கம் கேட்டு நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு, பீஹார் அரசு மட்டுமே பதில் அளித்துள்ளது. மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும், மூன்று வாரங்களுக்குள்

பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-ஏப்-202105:34:40 IST Report Abuse
meenakshisundaram இல்லை இல்லவே இல்லை ,ஆனால் அரசாங்கமே மக்களை பிச்சைக்காரர்களாக்கியதே குற்றம் .தெருவோரம் பிச்சை எடுப்பவன் குற்றவாளி என்றால் அரசே "ரேஷன் கார்டு 'என்ற அடையாள அட்டையை கொடுத்து இலவச அரிசி இருப்பது கிலோ .பொங்கல் இனாம் .பெண்களுக்கு ஆயிரத்து ஐநூறு மாதம் தோறும் ஆறு சிலிண்டர் காஸ் இலவசம் என்று மக்களில் பெருவாரியினரை அறிமுகப்படுத்தப்பட்ட பிச்சைக்காரர்களாக அதுவும் நிரந்தரமாக.ஆக்கியுயது குற்ற மில்லையா?
Rate this:
Cancel
11-ஏப்-202122:43:37 IST Report Abuse
ஆப்பு எங்க ஊரில், தமிழ்நாட்டுலதான். கோயிலுக்கு பெயர் போன ஊர். தினமும் பிச்சைக் காரங்க வேலைக்கு வர்ர மாதிரி டாண்ணு காலை எட்டு மணிக்கு வாட்டர் பாட்டில், செல்போனோடு வந்து அவிங்கவங்க இடத்தில் உக்காந்து தொழிலை ஆரம்பிச்சுருவாங்க. கையோ , காலோ சூம்பியிருக்கும். இல்லே வேற ஏதாவது குறை இருக்கும். இவிங்களை ஆட்டோவில் கொண்டுவந்து இறக்கிட்டு போயிருவாங்க. பிறகு மாலை 6 மணிக்கு திரும்ப ஆட்டோவில் கூட்டிக்கிட்டு போயிருவாங்க. தினமும் 500, 1000 கிடைக்கும்னு நினைக்கிறேன். இவங்களை பிடிச்சு வருமானவரி, தொழில்வரி வசூல் பண்ணினா இந்தியப் பொருளாதாரம் 350 லட்சம் பில்லியன் டிரில்லியனை தாண்டிடும்.
Rate this:
Cancel
11-ஏப்-202122:34:29 IST Report Abuse
ஆப்பு நம்ம வள்ளல் பால் பாண்டி ஐயாவைக் கேளுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X