பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா: அரசிடம் அனுமதி கேட்கிறது நிர்வாகம்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மதுரை :கொரோனா தொற்று பரவல் காரணமாக, மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆகமவிதிப்படி தடைஇன்றி சித்திரை திருவிழா நடத்த, அரசிடம் கோவில் நிர்வாகம் அனுமதி கேட்டுஉள்ளது.மதுரை சித்திரை திருவிழா என்றாலே, மீனாட்சி திருக்கல்யாணமும், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் தான், 'ஹைலைட்!' எந்த பேதமுமின்றி,
மீனாட்சி, கோவில், சித்திரை திருவிழா, அரசிடம் அனுமதி கேட்கிறது நிர்வாகம்

மதுரை :கொரோனா தொற்று பரவல் காரணமாக, மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆகமவிதிப்படி தடைஇன்றி சித்திரை திருவிழா நடத்த, அரசிடம் கோவில் நிர்வாகம் அனுமதி கேட்டு
உள்ளது.மதுரை சித்திரை திருவிழா என்றாலே, மீனாட்சி திருக்கல்யாணமும், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் தான், 'ஹைலைட்!' எந்த பேதமுமின்றி, லட்சக்கணக்கில் மக்கள் கூடி திருவிழாவை கொண்டாடுவர்.


பங்கேற்க கட்டுப்பாடுகடந்தாண்டு கொரோனா தொற்று பரவலால், இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது, பக்தர்களை வேதனை அடையச் செய்தது.அதேநேரம், சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணத்தை மையப்படுத்தியே நடக்கும் என்பதால், திருக்கல்யாணம் மட்டும், கோவில் உற்சவர் சன்னதியில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இதை, 'ஆன்லைனில்' கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

கள்ளழகர் கோவிலில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில், அழகர் இறங்கினார். இதையும், பக்தர்கள் ஆன்லைனில் கண்டு தரிசித்தனர். கொரோனா பரவல் குறைய ஆரம்பித்ததும், செப்டம்பரில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது. நேற்று முதல் பக்தர்கள் இரவு, 8:00 மணி வரை மட்டுமே கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா, பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா விதிமுறைகள்இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழா, ஏப்., 15 முதல், 25 வரை நடக்கிறது. பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற முக்கிய விழாக்களை, பக்தர்களின்றி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகமவிதிப்படி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, இந்நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என, அரசின் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சனுக்கு, கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கடிதம் எழுதியுள்ளார்.கடந்தாண்டு, துரதிர்ஷ்டவசமாக நிலவிய சூழலால், விழாவை கோவில் நிர்வாகம் கொண்டாட முடியவில்லை. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்தாண்டு ஆகமவிதிப்படி, திருவிழா பூஜைகளை செய்ய, பட்டர்கள் ஆர்வமாக உள்ளனர். கோவில் வளாகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, விழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
11-ஏப்-202115:30:15 IST Report Abuse
s t rajan மக்களாகிய நாம் mask, social distance, கை கால் முகம் சுத்தம் செய்தல், போன்ற வழிமுறைகளைப் பின்பற்றியிருந்தால், இந்த இருவிழா தடைகளை நாம் தவிர்த்திருக்கலாம். இன்றும் சில mask அணியாதவரை, "அணியுங்கள் உங்கள் நலனுக்காக" என்றால், நீங்க போலீஸ் ஆயிட்டீங்களா, என்று கிண்டல் பேசுபவர்கள் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Krishnakumar - Nellore,இந்தியா
11-ஏப்-202113:43:28 IST Report Abuse
Krishnakumar கோவில் திருவிழாக்கள் தடை இன்றி நடந்தால் தான் மக்களும் நாடும் நன்றாக இருப்பார்கள்....இயற்கை கிருமிநாசினி மஞ்சள் தெளித்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்..... சித்திரை திருவிழாக்களை அணைத்து கோவில்களிலும் நடத்த அரசு அனுமதிக்கவேண்டும்...
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
11-ஏப்-202113:11:04 IST Report Abuse
தத்வமசி இப்போது வந்துள்ள லாக்டவுன் முறையில் வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் வரலாம், தரிசனம் செய்யலாம். ஆனால் கூட்டம் கூடக்கூடாது, திருவிழாக்கள் நிறுத்தப் பட்டுள்ளன. இது யாருக்கு என்றால் கோவில்களுக்கு மட்டும் தான். சர்ச் மற்றும் மசூதிகளுக்கு இருப்பதாக தெரியவில்லை. சர்ச் மற்றும் மசூதிகளில் பிரசாதம் என்று எதுவும் கொடுப்பதில்லை. ஆனால் ஒரே நேரத்தில் கூடுகிறார்கள். சர்ச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அதிரும் சத்தத்துடன் ஒரே ஹாலில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் வழக்கம் போல கூட்டமாக வழிபாடு செய்கிறார்கள். யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒருவரின் முகத்திலும் முககவசம் இல்லை. கையை சுத்தம் செய்ய எந்த வழிமுறையும் வைக்க வில்லை. கூட்டாமான கூட்டம் வழக்கம் போல. ஆனால் கோவிலில் கூட்டம் கூட தடை. இப்போது வைணவ ஆசாரியர் ராமானுஜர் பிறந்த நாள் உத்சவம் பத்து நாட்கள் ஆரம்பித்தது. நேற்று முதல் தடை. யாரும் வரக்கூடாது, போகக்கூடாது என்று அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்.வெளியூரில் இருந்து கோவிலுக்குள் பக்தர்கள் வரக்கூடாது என்று தடை போட்டுள்ளனர். சர்ச்சில் ஏன் தடை இல்லை ? இப்பொது போட்டுள்ள லாக் டவுன் சரியாக மே மாதம் பத்து தேதிக்கு பாருங்கள் அப்படியே விலக்கி விடுவார்கள். காரணம் ரம்ஜான் வருகிறது. அரசின் கணக்கில் இருந்து கொரோனா பரவல் ஓடி விடும். அதற்குள் இந்துக்களின் பாரம்பரியாமான சித்திரை திருவிழா நடைபெறுகிறது. கொரோனா பரவி விடும் என்று பரப்புரை செய்கிறார்கள். தேர்தல் பரப்புரையை தெருத் தெருவாக சென்று செய்து கணக்காக கொரோனாவை பரப்பி விட்டு இன்று அதிக அளவில் பரவியதை கண்டும் காணாமல் தேர்தல் வரை இருந்து விட்டு இன்று பொது மக்களுக்கு அதுவும் இந்துக்கள் பண்டிகைகள் வரும் நேரத்தில் லாக்டவுன் போடுவதின் உள் நோக்கம் என்ன ? அரசு போன வருடமும் இப்படித்தான் ஓரவஞ்சனை செய்தது. இந்த வருடமும் அப்படியே செய்கிறது. கொரோனா சமயத்தில் சரியாக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களின் பண்டிகைகளின் சமயத்தில் அவர்களுக்கு தேவையான கடைகள் திறக்க, பண்டிகைகள் நடத்த லாக்டவுனை நீக்கி உதவியது. இந்த வருடமும் அதே போல இந்துக்களின் பண்டிகையின் போது லாக்டவுன், சிறுபான்மை மக்களின் பண்டிகையின் போது எல்லாம் சரியாகி விட்டது எனும் கோஷம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X