பொது செய்தி

இந்தியா

சென்னையை வீழ்த்தியது டில்லி

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: சென்னை அணிக்கு ஆரம்பமே சரியில்லை. டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 188 ரன்கள் குவித்த போதும், மோசமான பவுலிங், பீல்டிங் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் ஆறு மைதானங்களில் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ரிஷாப் பன்ட்டின் டில்லியை

மும்பை: சென்னை அணிக்கு ஆரம்பமே சரியில்லை. டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 188 ரன்கள் குவித்த போதும், மோசமான பவுலிங், பீல்டிங் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.latest tamil newsஇந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் ஆறு மைதானங்களில் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ரிஷாப் பன்ட்டின் டில்லியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட் பீல்டிங் தேர்வு செய்தார்.


latest tamil news
மொயீன் நம்பிக்கை


சென்னை அணிக்கு அனுபவ டுபிளசி, இளம் ருதுராஜ் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. டுபிளசி 'டக்' அவுட்டாக, ருதுராஜ் 5 ரன் எடுத்தார். சென்னை அணி 7 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. மொயீன் அலி, ரெய்னா இணைந்தனர். அஷ்வின் பந்துகளை மாறி மாறி பவுண்டரிக்கு விரட்டினர். இருப்பினும் முதல் 8 ஓவரில் சென்னை அணி 48/2 ரன் தான் எடுத்தது. அஷ்வின் சுழலில் மொயீன் அலி (36) அவுட்டானார்.


ரெய்னா அரைசதம்


அஷ்வின், அமித் மிஸ்ரா பந்துகளை சிக்சர்களாக விளாசினார் ரெய்னா. இவர் 32வது பந்தில் அரைசதம் எட்டினார். அம்பதி ராயுடு 23 ரன்னில் அவுட்டானார். காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா, சந்தித்த முதல் இரு பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுபக்கம் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட ரெய்னா (56 ரன், 4 சிக்சர்), வீணாக ரன் அவுட்டானார். பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் களமிறங்கிய கேப்டன் தோனி (0), இரண்டாவது பந்தில் போல்டானார்.


latest tamil newsகடைசி நேரத்தில் ஜடேஜா, சாம் கர்ரான் ஜோடி சேர்ந்து, 28 பந்தில் 51 ரன்கள் சேர்த்தது. சாம் கர்ரான் 34 ரன் எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (26) அவுட்டாகாமல் இருந்தார்.


இரண்டு அரைசதம்


டில்லி அணிக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. 38, 47 ரன்னில் பிரித்வி கொடுத்த 'கேட்சை' சான்ட்னர், ருதுராஜ் நழுவவிட, 27 வது பந்தில் அரைசதம் அடித்தார். மறுபக்கம் தவான், 35 பந்தில் அரைசதம் அடித்தார். ஓவருக்கு சராசரியாக 10 ரன்னுக்கும் மேல் எடுக்க (12 ஓவரில் 121 ரன்) வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது டில்லி.

முதல் விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்த போது, ஒரு வழியாக பிரித்வி (72) அவுட்டானார். அடுத்து தவான் (85), ஸ்டாய்னிஸ் (14) கிளம்பிய போதும், டில்லி அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப் பன்ட் (15) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devan - Chennai,இந்தியா
11-ஏப்-202115:43:10 IST Report Abuse
Devan Mr.Sundar even if Mr. Dhoni is old give respect. Ashamed your telling yourself a tamilian, who doesn't know how to respect others
Rate this:
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
11-ஏப்-202115:41:18 IST Report Abuse
Kumaresan P போன சீசனை போல தன்னம்பிக்கை குறைந்து காணப்பட்டதாக தெரியவில்லை இந்த முறை சென்னை அணி. நல்ல ஸ்கோர் தான் நேற்றைய முதல் போட்டியில். முதல் தோல்வி தொடர் வெற்றிகளை குவிக்கும். வாழ்த்துக்கள் சென்னை அணிக்கு.
Rate this:
Cancel
R Hariharan - Hyderabad,இந்தியா
11-ஏப்-202112:43:09 IST Report Abuse
R Hariharan வெற்றி தோல்வி சகஜம். இன்னும் நிறைய மேட்ச் இருக்கு. பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X