இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்டிராக்டர் கவிழ்ந்து 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்லக்னோ: உ.பி.,யில், பயணியருடன் சென்ற, 'டிரக்' பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, எடவா மாவட்டம், சகர்நகர் மலைப் பாதையில் சென்ற டிரக், திடீரென, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து
today, crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப்,


இந்திய நிகழ்வுகள்latest tamil news


டிராக்டர் கவிழ்ந்து 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்
லக்னோ: உ.பி.,யில், பயணியருடன் சென்ற, 'டிரக்' பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, எடவா மாவட்டம், சகர்நகர் மலைப் பாதையில் சென்ற டிரக், திடீரென, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரக் டிரைவர் உட்பட, 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.ஆக்ராவில் இருந்து, எடவா மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றபோது, இந்த விபத்து நிகழ்ந்ததாக, பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்தில் 4 பேர் பலி

நாக்ப்பூர்: மஹாராஷ்டிராவின் நாக்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சிகிச்சை பெற்றோரை வேறு பகுதிக்கு மாற்றியதுடன், தீ பரவாமல் தடுத்தனர். இருப்பினும், பெண் உட்பட நால்வர் தீயில் கருகி பலியாயினர்

சபாநாயகர் வாக்குமூலம்

திருவனந்தபுரம்: கேரளாவில், வெளிநாட்டு பணம் கடத்தல் வழக்கில் உள்ள தொடர்புகள் குறித்து, சட்டசபை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் பதில் அளிக்க, சுங்க அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பினர். அவர் ஆஜராகாததால், திருவனந்தபுரத்தில் அவரது அரசு குடியிருப்புக்கு, நேற்று முன்தினம் சென்ற சுங்கத்துறையினர், வழக்கு தொடர்பான அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.


தமிழக நிகழ்வுகள்

சென்னையில் 65.38 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்
சென்னை : துபாயிலிருந்து, விமான கழிப்பறைக்குள் மறைத்து வைத்து, கடத்திவரப்பட்ட, 65.38 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்க கட்டிகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின், துபாய் நகரிலிருந்து, 'ஏர் - இந்தியா' விமானம், நேற்று நண்பகல், 12:55 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்திலிருந்து பயணியர் கீழே இறங்கியவுடன், சுங்கத்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த விமானத்தின், இருவேறு கழிப்பறைகளின் தண்ணீர் தொட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 65.38 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.36 கிலோ தங்க கட்டிகள், பறிமுதல் செய்யப்பட்டன. தங்க கட்டிகளை கடத்தியவர்கள் குறித்து, சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.


latest tamil news


சிறுத்தை பலியான சம்பவம்; வனத்துறையினர் விசாரணை
கோவை:காரமடை அருகே சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.கோவை மாவட்டம், காரமடை அருகே மானார் வனப்பகுதியில் வனக்காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பசுங்கனிமேடு பகுதியில், ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.வன கால்நடை அலுவலர் சுகுமார் உயிரிழந்த சிறுத்தையை ஆய்வு செய்தார். ஆய்வில், சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பது தெரிந்தது. ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.வன கால்நடை அலுவலர் சுகுமார் கூறுகையில்,''சிறுத்தை சாலையை கடக்க முயன்றபோது, வாகனத்தில் அடிபட்டு, சிறிது துாரம் சென்று இறந்திருக்கலாம்,'' என்றார்.


latest tamil news


தறிகெட்டு ஓடிய கார் மோதி பனியன் தொழிலாளி பலி
அனுப்பர்பாளையம்:திருப்பூர் அருகே, தறிகெட்டு ஓடிய கார் மோதி, பைக்கில் வந்த பனியன் தொழிலாளி பலியானார்; ஐந்து பேர் காயமடைந்தனர்.அவிநாசியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, கார் ஒன்று அதிவேகமாக திருப்பூர் நோக்கி வந்தது. திருமுருகன் பூண்டி அருகே வந்தபோது, தறிகெட்டு ஓடி, பைக்குகளில் சென்றுகொண்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது, கார் மோதியது. இதில், படுகாயமடைந்த அம்மாபாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி ஈஸ்வரமூர்த்தி, 40, பலியானார். காயமடைந்த ஐந்து பேர் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கிருந்த பொதுமக்கள் காரை மடக்கி பிடித்தனர். கார் ஓட்டி வந்தவருக்கு 'தர்ம அடி' கொடுத்து, திருமுருகன்பூண்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த நுால் வியாபாரி கூத்தபெருமாள் மகன் கிஷோர் சங்கர், 22, என்பது தெரியவந்தது.போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். கோவை கல்லுாரி ஒன்றில், கிஷோர், எம்.பி.ஏ., படித்து வருகிறார்.

இந்து முன்னணிபிரமுகர் மீது தாக்குதல்

கோவை:கோவையில் நேற்றிரவு இந்து முன்னணி பிரமுகர் மீது மர்ம கும்பல் தாக்கியதில் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கோவை, போத்தனுாரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்,30. கோவை மாநகர மாவட்ட இந்து முன்னணி துணை தலைவராக உள்ளார். நேற்றிரவு போத்துனுாரிலுள்ள அவரது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் வழிமறித்து அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பினர். சாலையில் வந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் போத்தனுார் போலீசார் விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர் . ராமகிருஷ்ணன் தாக்கப்பட்ட தகவல் அறிந்து,இந்து முன்னணியினர் அரசு மருத்துவ மனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் மோதி வாலிபர் பலி

விழுப்புரம் : தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர், ரயில் மோதி இறந்தார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கொரத்தி அக்கடவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகன் விஜய்,19; இவர், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, சேர்ந்தனுார் ரயில்வே பாதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, சென்னையில் இருந்து திருச்செந்துார் நோக்கி சென்ற செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. அதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அண்ணன் மீது தாக்குதல் தம்பி உட்பட 4 பேர் மீது வழக்கு

செஞ்சி : சொத்து தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

செஞ்சி அடுத்த மாத்துார் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாஸ்,67; மைக்கேல்,65; சகோதரர்கள். இவர்களுக்குள் சொத்து பிரச்னையில் முன் விரோதம் உள்ளது.இதன் காரணமாக கடந்த 31ம் தேதி மாலை வீட்டின் பின்புறம் இருந்த தாசை, மைக்கேல் குடும்பத்தினர் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.தாஸ் கொடுத்த புகாரின் பேரில்அனந்தபுரம் போலீசார், மைக்கேல், அவரது மருமகன் ராபர்ட்,40; மகள்கள் ஜெயசீலி, ஜெனிபர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாணவியை கடத்தி திருமணம்: தொழிலாளிக்கு போக்சோ

திருப்பூர்:மாணவியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி மீது 'போக்சோ' சட்டம் பாய்ந்தது.குண்டடத்தில், 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, இரு மாதம் முன்பு, 'பேஸ்புக்' மூலமாக, அரக்கோணத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி தட்சிணாமூர்த்தி, 22 என்பவர் அறிமுகமானார்.இவர்களது பழக்கம் காதலாக மாறியது. கடந்த, 31ம் தேதி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, அரக்கோணத்தில் திருமணம் செய்தார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசார் விசாரித்து வந்தனர். சிறுமியை திருமணம் செய்த, தட்சிணாமூர்த்தியை 'போக்சோ' வழக்கில் பதிவு செய்து கைது செய்தனர்.

ரூ 3 கோடி சீட்டு மோசடி; மேலும் இருவர் கைது

திருப்பூர்:திருப்பூரில் போலி சீட்டு நிறுவனம் நடத்தி, 3 கோடி ரூபாயை மோசடி செய்த வழக்கில், மேலும், இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், வளையங்காடு, எம்.என்.சிவசுப்ரமணியன் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன். அப்பகுதியில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த முனியாண்டி என்பவரிடம், நான்கு சீட்டுகள் சேர்ந்து, 3.20 லட்சம் ரூபாய் செலுத்தினார். சீட்டு முதிர்வடைந்த பின், பணத்தை வழங்காமல், முனியாண்டி தலைமறைவானார்.ஜெகநாதன் புகார் அளித்ததையடுத்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன், முனியாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தார். சீட்டு நிறுவனம் நடத்தி, மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.இவ்வழக்கில் தொடர்புடைய சீட்டு நிறுவனத்தின் பங்குதாரர்களான ஊத்துக்குளி, காளிபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், திருப்பூர், எம்.என்.எஸ்., நகரை சேர்ந்த பிரபு ஆகியோரை தற்போது, போலீசார் கைது செய்தனர்.

ஓட்டலில் ரூ.1.35 லட்சம் திருட்டு; மேலும், 2 கடையில் முயற்சி

பல்லடம்;பல்லடம் அருகே, அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து, 1.35 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. அருகிலுள்ள இரண்டு கடைகளிலும் திருட முயற்சி நடந்தது.பல்லடம் அடுத்த கே.என்.புரம் லட்சுமி மில்ஸ் பகுதியில், நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து உள்ள மூன்று கடைகளில் திருட்டு சம்பவம் நடந்தது. நேற்று காலை, வழக்கம்போல் கடை திறக்க வந்த உரிமையாளர்கள், கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.ஓட்டல், பலகாரம், செருப்பு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதில், பலகாரம், செருப்பு கடைகளில் எதுவும் திருடு போகவில்லை.சிவகங்கையை சேர்ந்த முருகன், 30 என்பவருக்கு சொந்தமான ஓட்டலில், சேமிப்பு தொகையாக உண்டியலில் வைத்திருந்த, 1.15 லட்சம், மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கல்லாவில் வைத்திருந்த, 20 ஆயிரம் என, 1.35 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. அருகிலுள்ள 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் வேன் மோதல்; 5 வயது சிறுவன் பலி; தம்பதி காயம்

வேப்பூர்:வேப்பூர் அருகே கார் மீது, மினி வேன் மோதிய விபத்தில், 5 வயது சிறுவன் இறந்தான்; தம்பதி காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஆவாரைகுளம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு, 43; கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர், நேற்று அதிகாலை தன் மனைவி பாலஅமுதா, 39, மகன் குருபிரசாத், 5, ஆகியோருடன் டி.என். 72 பிஒய் 5225 எண்ணுள்ள மாருதி காரில், திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தார்.

காலை, 6:30 மணியளவில், கடலுார் - சேலம் சாலையில், வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே, எதிரே நெய்வேலி நோக்கி வந்த, கே.ஏ.09 டி 8370 எண்ணுள்ள இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த மினி வேன், கார் மீது மோதியது.இந்த விபத்தில், சிறுவன் குருபிரசாத் அதே இடத்தில் இறந்தான். தங்கராசு, பாலஅமுதா படுகாயம் அடைந்தனர். இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


ரூ.50 லட்சம் கடன் பெற்று மோசடி தலைமறைவு பெண்ணுக்கு வலை

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில், 50க்கும் மேற்பட்ட பெண்களின் பெயரில், 50 லட்சம் கடன் பெற்று தலைமறைவான பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்தவர் பிரியா, 42. ஜவுளிக்கடை நடத்தினார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக பல பெண்களிடம் கூறினார். மேலும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களின் நகல்களில் கையொப்பமிட்டு கொடுத்தால், 1000 ரூபாய் கமிஷன் தருவதாகவும் தெரிவித்தார்.

இதை நம்பிய, 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல்களை கையொப்பமிட்டு அவரிடம் கொடுத்தனர். அதைக்கொண்டு அவர்கள் பெயரில், தனியார் நிறுவனம் ஒன்றில், 50 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற பிரியா, ஜவுளிக்கடையை மூடிவிட்டு, குடும்பத்துடன் தலைமறைவானார்.

இந்நிலையில் கடனை திரும்ப செலுத்தும்படி நிதி நிறுவனத்தினர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்கள், நேற்று எஸ்.பி., கார்த்திக்கிடம் புகார் அளித்தனர். அவர் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.


உலக நிகழ்வுகள்

மூவருக்கு மரண தண்டனை
துபாய்: சவுதி அரேபியாவில், உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராணுவ வீரர்கள் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, 2019ம் ஆண்டில், 184 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி, சீனா, ஈரானுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.**

தம்பியை கொன்ற சிறுவன்
ஹூஸ்டன்:அமெரிக்காவில், ஹூஸ்டன் நகரில், 3 வயது சிறுவன், பிறந்து, 8 மாதங்களான தம்பி பாப்பாவின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்கத் தவறிய பெற்றோர் தான், இந்த சோகத்திற்கு காரணம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

காட்டுத் தீயில் எரிந்த வீடுகள்
அரிசோனா:அமெரிக்காவில், அரிசோனா மாகாணம், துத்லிவில்லி கிராமத்தில், குடியிருப்பை ஒட்டிய வனப் பகுதியில் திடீரென தீப்பற்றி, வேகமாக பரவியது. இதில், 12 வீடுகள் எரிந்து சாம்பலாயின. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X