இந்திய கடலில் அத்துமீறல் அமெரிக்க ராணுவம் மறுப்பு

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
வாஷிங்டன்: 'இந்திய கடல் பகுதிக்குள், எங்கள் போர்க் கப்பல் சட்டப்படி தான் நுழைந்தது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க கடற்படையின், 'ஜான் பால் ஜோன்ஸ்' என்ற போர்க்கப்பல், சமீபத்தில், அரபிக் கடலில், லட்சத் தீவுகள் அருகே ரோந்து வந்துள்ளது.இந்தியாவின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்குள் அனுமதியின்றி, போர்க் கப்பல் வந்ததை கண்டித்து, வெளியுறவு அமைச்சகம்
indian sea, america, ship, reuse, இந்திய கடல், அத்துமீறல், அமெரிக்க ராணுவம், மறுப்பு

வாஷிங்டன்: 'இந்திய கடல் பகுதிக்குள், எங்கள் போர்க் கப்பல் சட்டப்படி தான் நுழைந்தது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க கடற்படையின், 'ஜான் பால் ஜோன்ஸ்' என்ற போர்க்கப்பல், சமீபத்தில், அரபிக் கடலில், லட்சத் தீவுகள் அருகே ரோந்து வந்துள்ளது.

இந்தியாவின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்குள் அனுமதியின்றி, போர்க் கப்பல் வந்ததை கண்டித்து, வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இந்த பிரச்னை தொடர்பாக, துாதரக ரீதியில் அமெரிக்க அரசிடம் கவலை தெரிவித்துள்ளதாக, அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையக செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:அமெரிக்க போர்க் கப்பல், சர்வதேச கடல் சட்டத்தின்படி, வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது. இதற்கு இந்தியாவின் முன் அனுமதி தேவையில்லை. கடல் பகுதியில் எங்களுக்கு உள்ள உரிமை, சுதந்திரம் மற்றும் சட்டத்தின்படியே செயல்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



அமெரிக்க கடற்படை வெளியிட்ட முந்தைய அறிக்கையில், லட்சத்தீவில் இருந்து, 130 கடல் மைல் தொலைவில் உள்ள, இந்தியாவின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்தில் நுழைய, சர்வதேச கடல் சட்ட ஒப்பந்தப்படி, முன் அனுமதி தேவையில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஏப்-202122:27:19 IST Report Abuse
ஆப்பு சரிதான்... அப்பாச்சி ஹெலிகாப்டர் ஆர்டரை ரத்து செஞ்சுறலாம்.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
11-ஏப்-202116:50:37 IST Report Abuse
Hari பத்தாயிரம் சீனி மூட்டையை எறும்பு தூக்கிசென்றுவிட்ட்து ? சர்க்காரியா அதிர்ச்சியாகி தண்ணீர் குடித்தார்.
Rate this:
Cancel
11-ஏப்-202113:39:11 IST Report Abuse
Ganesan Madurai இந்த அனுமதியை இந்தியத்தரப்பில் கொடுத்த அரசு எது? அப்ப நாளை முதல் வடகொரியாவோ கியூபாவோ ரஷ்யாவோ சீனாவோ ஈரானோ தனது கடற்படை கப்பல்களை அமெரிக்க பிரத்யேக பொருளாதார வர்த்தகத மண்டலத்தில் நுழைக்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை. சரிதானே அங்கிள் ஸாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X