பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : 'பயோ வார்' கவனம் தேவை!

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :பொன்.கருணாநிதி, கோட்டூர், பொள்ளாச்சியிலிருந்து அனுப்பிய, 'இ மெயில்' கடிதம்: 'கொரோனா' இரண்டாவது அலை வரும் எனத் தெரிந்தும் கூட, முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இன்றியும், தேர்தல் காலத்தில் வலம் வந்தோரே, இந்த தொற்று அதிகமாவதற்கு முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டை, யாரும் மறுக்க

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
பொன்.கருணாநிதி, கோட்டூர், பொள்ளாச்சியிலிருந்து அனுப்பிய, 'இ மெயில்' கடிதம்: 'கொரோனா' இரண்டாவது அலை வரும் எனத் தெரிந்தும் கூட, முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இன்றியும், தேர்தல் காலத்தில் வலம் வந்தோரே, இந்த தொற்று அதிகமாவதற்கு முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டை, யாரும் மறுக்க முடியாது.latest tamil newsஎச்சரிக்கை உணர்வின்றி அலைந்த அரசியல்வாதிகளை, அரசு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பிரசாரக் கூட்டங்களுக்கு தடை விதித்திருக்க வேண்டும். அதை செய்யாததால், நாம் மீண்டும் ஊரடங்கை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளோம். ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, கொரோனா-வை விடவும் கவலை அளிக்க கூடியது. அரசு இனி செய்ய வேண்டியது, முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், கிருமிநாசினி பயன்பாட்டையும் கட்டாயமாக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது அபராதம், சிறை தண்டனை என, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில், இதை தவிர வேறு வழி இல்லை.

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை, உறுதிப்படுத்த வேண்டும். நம் தேவைக்கு போக மீதி இருந்தால் மட்டுமே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கும், கொரோனா தொற்று வருகிறது என்ற தகவல், அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது. இது குறித்து விரிவான ஆய்வு, உடனடியாக தேவை.

தடுப்பூசி குறித்த நம்பகத்தன்மையை, மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும்.நாடெங்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டோரில், சுழற்சி முறையில் சிலரை தேர்வு செய்து, அவர்களின் உடலில் அதிகரித்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை துல்லியமாக கணக்கிட்டு, அதை வெளியிட வேண்டும்; இதனால் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை, மக்களிடம் அதிகரிக்கும்.


latest tamil newsமேலும், இந்த வைரஸ் குறித்து இன்னமும் கூடுதலான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். புனேவில் உள்ளது போல, வைரஸ் ஆராய்ச்சி நிலையம், நாடெங்கும் பல இடங்களில் உருவாக்கப்பட வேண்டும். மூன்றாம் உலகப் போர், கிருமி ஆயுதம் மூலம் நடக்கும் என, அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வைரஸ் குறித்த ஆராய்ச்சி மையங்கள், அதிகளவில் நிறுவப்பட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை அளிக்க, மக்கள் அனைவரும், அரசின் நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-ஏப்-202102:41:50 IST Report Abuse
மலரின் மகள் தெளிவற்ற சிந்தனைகளை பொருந்தி வரும் கட்டுரைகள் தவிர்க்கப்படலாம்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
11-ஏப்-202122:01:15 IST Report Abuse
Tamilnesan தேர்தல் ஆணையம் என்று ஒன்று இந்தியாவில் இருந்தால் ஒவ்வொரு கட்சிக்கும் தலா பத்து கோடி ருபாய் அபராதம் விதிக்க வேண்டும். அரசியல் பிரச்சார கூட்டங்களால் தான் கொரநா பரவியுள்ளது.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
11-ஏப்-202121:58:54 IST Report Abuse
Tamilnesan அமெரிக்கா அப்பாவி வளைகுடா நாட்டின் எந்த காரணமும் இன்றி போர் தொடுத்ததே....... இந்த பெரியண்ணன் ஏன் சீனா மீது போர் தொடுக்க தயங்குகிறது? ஏனெனில், இருவருமே திருடர்கள். இந்த கொரநா காரணம் காட்டி வியாபாரத்தை விரிவு படுத்த எண்ணுகிறது அமெரிக்கா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X