பொது செய்தி

இந்தியா

20 ஆண்டுகளில் இல்லாத எரிபொருள் தேவை சரிவு

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் எரிபொருள் நுகர்வு கடந்த நிதியாண்டில், 9.1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சரிவு, 1998----99ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முறையாக நாட்டின் எரிபொருள்

புதுடில்லி : நாட்டின் எரிபொருள் நுகர்வு கடந்த நிதியாண்டில், 9.1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சரிவு, 1998----99ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முறையாக நாட்டின் எரிபொருள் தேவை, கடந்த நிதியாண்டில் குறைந்துள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டில், 214.12 மில்லியன் டன் அளவுக்கு தேவை இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில், 194.63 மில்லியன் டன் ஆக சரிவைக் கண்டுள்ளது.


latest tamil news



இந்த எரிபொருள் சரிவுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது, டீசல் தேவையில் ஏற்பட்ட சரிவாகும். கிட்டத்தட்ட, டீசல், 12 சதவீதமும் பெட்ரோல் தேவை, 6.7 சதவீதமும் சரிவு காணப்பட்டுள்ளது. கொரோனாவால் நாடுமுழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து வணிகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. விமான நிலையங்களும் மூடப்பட்டன. இத்தகைய காரணங்களால் சரிவு ஏற்பட்டுள்ளது.சமையல் எரிவாயு மட்டும் இந்த காலகட்டத்தில், 4.7 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஏப்-202122:35:09 IST Report Abuse
தல புராணம் அன்றைய பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாக "வரப்புயர" என்று ஒற்றை வார்த்தையில் ஆயிரம் பொருள் சொன்னாள் ஒளவை. இன்றைய பொருளாதாரத்தின் அச்சாணி, உந்து சக்தி, அளவுகோலில் முக்கியமான ஒன்று எரிபொருள் நுகர்வு. மின்சக்தியால் இயங்கும் சாலை போக்குவரத்து சாதனங்கள் இந்தியாவில் ஜீரோ பெர்சன்ட்.. கூட ஒரு புள்ளி போட்டு மேலும் ஐந்து ஜீரோ போட்டு ஒரு ஒண்ணோ, ரெண்டோ போட்டுக்குங்க. கிரிக்கெட் "வீரர்கள்" பார்டரில் சண்டையிட்டு சம்பாரிச்ச காசில், சினிமா "ஹீரோக்கள்" மக்களை பேராபதிலிருந்து காப்பாற்றி பெற்ற கொடையில் ஒன்றிரண்டு டெஸ்லா வாகனம் வாங்கியிருக்கலாம். மற்றபடி குப்பனும், சுப்பனும் செல்லும் ஆட்டோ, பேருந்து, லாரி, என்று கோடிக்கணக்கான வாகனங்கள் செல்வது பெட்ரோலில் / டீசலில் தான்.. உற்பத்தி பொருட்களில் பெரும்பான்மை நாடு முழுவதற்கும் கொண்டு செல்வது லாரிகளில் தான். பெட்ரோல் விலை ஏற்றத்தால் காரில் போகமுடியவில்லை என்றால் என்ன, விமானங்களில் செல்லலாமே என்று சொன்ன உபி அமைச்சர் ஞாபகம் இருக்கா ? பெட்ரோல் விலையை குறைப்பது என்பது குழப்பமான விஷயம் - சொன்னது நம்ம மத்திய நிதி மந்திரி தான்.. ஆனால் எலெக்சனுக்கு மட்டும் ஓரிரண்டு ரூபா கொறைச்சாங்க. பரிகாரத்துக்கு பெட்ரோலிய பொருள்களில் இருந்து தயாராகும் உர விலையை 50% விலை ஏற்றி, பெட்ரோல் விற்பனை சரிவால், சரிவடைந்த பெட்ரோலிய முதலாளியின் லாபத்தை சரி கட்டினார் நமது முதலாளிகளின் காவலர். உர விலையை 50% உயர்த்தினால் விவசாயி வருமானம் இரட்டிப்பாகும் என்பது தான் இவர்களின் பொருளாதார கணக்கு.. பெட்ரோல் /டீசல் நுகர்வு குறைவு, சந்தையில்அதன் மாற்று பொருள்களின் விளைவால் அல்ல.. மாறாக, விண்ணை முட்டும் விலை உயர்வால் என்பதை தெரிந்து கொள்ள ஹார்வர்டு பொருளாதார நிபுணத்துவம் தேவை இல்லை.. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் முதுகெலும்பை உடைத்து, அதில் பல்லக்கு செய்து பெருமுதலாளிகளை தூக்கி கொண்டு செல்லும் பா-சிச அரசு தான் நம்முடைய மத்திய அரசு.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஏப்-202115:04:18 IST Report Abuse
S.Baliah Seer எனக்கு பெட்ரோல் வேண்டாம் போடா.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
11-ஏப்-202114:55:00 IST Report Abuse
amuthan நம்ம ஊர்ல விலை குறையமாட்டேன் என்கிறதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X