பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரகண்டை தமிழகம் பின்பற்ற வேண்டும்: ஈஷா யோகா நிறுவனர் சத்குரு

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை: 'உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்' என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு விருப்பம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:உத்தரகண்ட் மாநில அரசு, 51 கோவில்களை, அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில், அரசு கட்டுப்பாட்டில்

சென்னை: 'உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்' என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு விருப்பம் தெரிவித்துள்ளார்.latest tamil newsஇது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:உத்தரகண்ட் மாநில அரசு, 51 கோவில்களை, அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில், அரசு கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கோவில்கள், மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளன. இது, மிகப்பெரிய முன்னேற்றம்.கோவில்கள், பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை, உத்தரகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது.


latest tamil newsஇந்த நடவடிக்கையை, மற்ற மாநில முதல்வர்களும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.பிற மாநிலங்களில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிப்பது, உத்தரகண்ட் போல எளிமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், விருப்பம் இருந்தால், எத்தகைய சிக்கலுக்கும் நம்மால் தீர்வு காண முடியும்.இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
11-ஏப்-202121:55:59 IST Report Abuse
Rajas தமிழகத்தில் புராதன காலத்திலிருந்தே கோவில்கள் மீது அரசுக்கு கட்டுப்பாடு உண்டு. ஏனென்றால் பெரும்பாலான கோவில்களை உருவாக்கியது மன்னர்களின் அரசுகள் தான். ஆனால் வட இந்தியாவில் ஓயாத போரினால் அங்கே அரசர்கள் கோவில்களை மடங்களின் நிர்வாகத்திற்கு கொண்டு சென்றனர். வட இந்தியாவில் பிரமாண்ட கோயில்கள் குறைவு. ஆனால், தென்னிந்தியாவில் ஏராளமான பிரமாண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சொத்துகளும் இருக்கின்றன. இவற்றை கையாள்வதற்குதான் இந்து சமய அறநிலையத் துறையே உருவாக்கப்பட்டது. வட இந்தியாவில் உள்ள மந்திர் என்று சொல்லப்படும் கோயில்கள் இன்றளவும் தனியார் நிர்வாகத்திடம்தான் உள்ளன. ஆந்திராவில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகுதான், தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது. இன்னும் பல வட மாநிலங்களில் இத்தகைய சட்டமே இல்லை. எனவே, தமிழகக் கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னால் இருப்பது என்ன
Rate this:
jagan - Chennai,இலங்கை
17-ஏப்-202100:43:57 IST Report Abuse
jaganஇப்போது ஆள்பவர்கள் நாணயமற்றவர்கள். முன்னோர்களுடன் ஒப்பிட முடியாது. அவர்கள் கட்டியதை இப்போதுள்ளவர்கள் பாழாக்கும் நிலைக்கு வந்ததே காரணம். இப்போது ஜனனயகம் வந்தது எனறால் பின்னால் இருப்பது என்ன என்ற கேட்பீர்கள். மன்னராட்சிக்கே போகலாமா?...
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
11-ஏப்-202119:57:05 IST Report Abuse
Rajas ஆசையை துறந்து விடு, அடக்கி கொள் என்பது நானிகள், சித்தர்கள், ரிஷிக்கள், ஆன்மிக பெரியவர்களின் வாக்கு. ஆனால் அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் இந்த நவீன குரு. அத்தனைக்கும் ஆசைப்பட்டால் கொலை, கொள்ளை, கடத்தல், அடுத்தவனை ஏமாற்றுதல், அடுத்தவரின் உடமையை திருடுதல், நேர்மையின்மை என்று தான் நடக்கும். ஏற்கனவே தறி கெட்டு ஓடும் சமுதாயத்தில் இந்த அத்தனைக்கும் ஆசைப்படு இன்னமும் நிலைமையை மோசமாக்கும்.
Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
11-ஏப்-202120:57:45 IST Report Abuse
Rajagopalமக்களுக்காக சேவை செய்வதும் குருக்கள் பலரது கடமை. ஆன்மீக கலாச்சாரத்தின் அஸ்திவாரத்தை அவ்வப்போது பலப்படுத்துவதும் அவர்களது கடமை. இந்து கோயில்கள் அரசின் கையில் சிக்கி அழிந்துள்ளன. அவற்றை மீட்பது எல்லா இந்துக்களின் கடமை. அதற்காகத்தான் அவர் உள்ளே இறங்கி இருக்கிறார்....
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
11-ஏப்-202119:51:24 IST Report Abuse
Rajas ஆடி மாதத்தில் திருவிழா என்று பல கும்பல்கள் பொது மக்களிடம் நன்கொடை வாங்கி அந்த பணத்தில் குடி, இரவு முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் என்று மக்களை இம்சத்து வருகின்றன. அதை கேட்க ஆள் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X