பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்து ; இரு ஆண்டு இழுபறிக்குப் பின் முன்னேற்றம்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை : 'இந்தியா, ஜப்பான் இடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது,'' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ.1264 கோடியில் இப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டும்

மதுரை : 'இந்தியா, ஜப்பான் இடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது,'' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



latest tamil news



மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ.1264 கோடியில் இப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டும் பணியை தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லை. பிரதான கட்டுமான பணிக்கான நிதியை ஜிக்காவிடம் (ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை) மத்திய அரசு கோரி இருந்தது. இதில் நீடித்த இழுபறியால் இரு ஆண்டுகளாக பணிதுவங்கவில்லை.

இதற்கிடையே 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கடந்தாண்டு டிசம்பரில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால் மார்ச் மாதம் முடிவு வரை எந்த தகவலும் இல்லை.
கடன் ஒப்பந்தம் கையெழுத்து
இந்நிலையில் ஜப்பான், இந்தியா இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் பற்றி தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில விவரங்களைகோரினார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இந்த ஒப்பந்த ஆவணம் கிடைத்தப் பிறகு தான், முழு விவரத்தையும் தெரிவிக்க முடியும்' என கூறியுள்ளது. இரு ஆண்டுகளாக எய்ம்ஸ் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதது மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டுபண்ணியது.


latest tamil news



இதை பயன்படுத்தி சட்டசபை தேர்தலில் எதிர்கட்சிகள் பிரசார வியூகம் அமைத்தன. ஒற்றை செங்கலை எடுத்துக்கொண்டு உதயநிதி பிரசாரம் செய்தார். இச்சூழலில் கடன் ஒப்பந்தம்கையெழுத்தாகி இருப்பது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இனி மற்ற பணிகள்வேகமெடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.-----

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஏப்-202117:33:03 IST Report Abuse
ஆனந்தன் அந்த பாட்டேல் சிலைக்கு பதிலாக 4 மருத்துவமனை கட்டி இருக்கலாம். இப்போது வேரு ஒரு நாட்டை நம்பி இருக்கிறோம்.. மத்திய அரசுக்கு எது முக்கியம் என்று கூட தெரியவில்லை..
Rate this:
Cancel
11-ஏப்-202107:33:48 IST Report Abuse
ஆப்பு தமிழக உள்கட்டமைப்புக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்குவாங்களாம். மெட்ரோ ரயிலுக்கு அமித்ஷா 63000 கோடிக்கு அடிக்கல் நாட்டுவாராம். ஆனா எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு 1500 கோடிக்கு ஜப்பான் கிட்டே தொங்குவாங்களாம்.
Rate this:
Cancel
Ganesan - Masurai,இந்தியா
11-ஏப்-202107:05:23 IST Report Abuse
Ganesan மக்களுக்கு உபயோகமாக இருக்கும் மருத்துவ திட்டங்களில் அரசியல் இருக்கக்கூடாது. ஏனென்றால் அது மக்களின் நலனை பாதிக்கும் என்பதால் எய்ம்ஸ் திட்டத்தை மதுரையில் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X