பாக்.,கில் கோவில் இடிப்பு; சீரமைக்க ரூ.3.48 கோடி

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பெஷாவர்: பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட ஹிந்து கோவிலை சீரமைக்க, கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், 3.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம் கராக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில், பழமை வாய்ந்த ஹிந்து கோவில் மற்றும் ஸ்ரீ பரமன்ஸ் ஜி மஹராஜ் சமாதி ஆகியவை இருந்தன. இவற்றை முஸ்லிம் அமைப்பினர், கடந்த ஆண்டு டிச.,

பெஷாவர்: பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட ஹிந்து கோவிலை சீரமைக்க, கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், 3.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.



latest tamil news


நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம் கராக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில், பழமை வாய்ந்த ஹிந்து கோவில் மற்றும் ஸ்ரீ பரமன்ஸ் ஜி மஹராஜ் சமாதி ஆகியவை இருந்தன. இவற்றை முஸ்லிம் அமைப்பினர், கடந்த ஆண்டு டிச., மாதம் இடித்து சேதப்படுத்தினர். இதற்கு, நம் மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தது.

இதையடுத்து, 'கோவில் மற்றும் சமாதி சீரமைப்பு பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்' என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து, கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன. இதற்கிடையே, கைபர் பக்துன்க்வா மாகாண ஹிந்துக்கள் அமைப்பினர், கடந்த மாதம் நடத்திய கூட்டத்தின் முடிவில், கோவிலை இடித்த முஸ்லிம் அமைப்பினரை மன்னிப்பது என, முடிவு செய்தனர்.


latest tamil news


இந்நிலையில், கோவில் சீரமைப்பு பணிகளுக்காக, கைபர் பக்துன்க்வா மாகாண அரசு தற்போது, 3.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், கோவில் சீரமைப்பு பணிகள், விரைந்து முடிவுக்கு வரும் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஏப்-202110:51:25 IST Report Abuse
Natarajan Ramanathan 3.48 கோடி பாகிஸ்தான் ரூபாய் என்பது வெறும் 2,27,000 அமெரிக்க டாலர் மட்டுமே.
Rate this:
Cancel
Hm Join - Chennai,இந்தியா
11-ஏப்-202108:37:12 IST Report Abuse
Hm Join பாகிஸ்தானை நினச்சு நீ ஏன் கவலை படுற...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
11-ஏப்-202107:50:37 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இந்தப்பணத்தை இந்தியா கொடுத்தால் பாகிஸ்தான் கோவிலுக்கு செலவு பண்ணாது இந்தியன் முஜாஹிதீன் அக்கவுண்டுக்கு பணம் போகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X