பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி தேவை அதிகரிப்பு 'எய்ம்ஸ்' தலைவர் விளக்கம்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : ''தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்துவது, சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கையில் தான் உள்ளது,'' என, எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரந்தீப் குலாரியா கூறினார்.நாட்டில் கொரோனாவின் இரண்டாவதுஅலை அதிகரித்துள்ளது. கொரோனாவை தடுக்க, 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை,

புதுடில்லி : ''தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்துவது, சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கையில் தான் உள்ளது,'' என, எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரந்தீப் குலாரியா கூறினார்.



latest tamil news



நாட்டில் கொரோனாவின் இரண்டாவதுஅலை அதிகரித்துள்ளது. கொரோனாவை தடுக்க, 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள, 'சீரம்' நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்தியாவில் தயாராகும்இரண்டு தடுப்பூசிகளுக்கும், சர்வதேசஅளவில் பெரும் வரவேற்புகிடைத்து ள்ளது.பல நாடுகள், இந்தியா விடமிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்து வருகின்றன.இந்தியாவிலும் தடுப்பூசிகள் தேவை தினமும் அதிகரித்து வருகின்றன.

இது பற்றி, சீரம் நிறுவன தலைவர் அதர் புனவல்லா கூறியதாவது:நாங்கள் தினமும், 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தயாரித்து வருகிறோம். இதை இரு மடங்காக அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இதற்கு, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவை. இது பற்றி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



இதற்கு பதில் அளித்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலாரியா கூறியதாவது:நம் தடுப்பூசிகளுக்கு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தேவை அதிகரிக்கும் என, ஆறு மாதங்களுக்கு முன்பே சொல்வதற்கு, அறிவியல் கண்டுபிடிப்பு எதுவும் தேவையில்லை. தயாரிப்பை அதிகரிப்பது, சம்பந்தபட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கையில் தான் உள்ளது. இதற்கான நிதி தேவை பற்றி, நான் அறிவுரை கூற முடியது. எனினும், முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் பலர் தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஏப்-202100:04:08 IST Report Abuse
தல புராணம் எட்டு கட்டமா மேற்கு வங்கத்துக்கு பத்து முறை கூட்டம் கூட்டமா மக்கள் வரிப்பணத்தை வீணடித்து பறந்து சென்று, பொதுக்கூட்டம் கூட்டி நோயை பரப்பும் இந்த வைரஸ் கூட்டம். தமிழ்நாட்டிலும் அதே தான் செஞ்சாங்க..
Rate this:
Cancel
Durai - Kozhikode,இந்தியா
11-ஏப்-202120:53:57 IST Report Abuse
Durai மூவாயிரம் கோடியை சீரம் நிறுவனத்துக்கு கொடுத்தால், ஒரு கும்பல் மோடி கார்பொரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார் என்று கூவுவார்களே
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
11-ஏப்-202112:17:56 IST Report Abuse
vbs manian இதில் ஏகத்துக்கும் அரசியல் நடக்கிறது. மத்திய அரசு வெவ்வேறு மாநிலங்களுக்கு எவ்வளவு ஊசிகள் எந்த தேதியில் அனுப்பப்பட்டன என்ற புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும். மாநிலங்களும் எவ்வளவு ஊசிகள் போடப்பட்டன எவ்வளவு வீணடிக்க பட்டன என்ற விவரங்களை வெளியிட வேண்டும். யார் உண்மை யார் போய் என்று தெரிந்து விடும் அதே சமயம் வெளியி நாட்டு ஏற்றுமதி குறைக்க படவேண்டும். இன்னொரு முக்கிய விஷயம் கோவிட ஊசியின் மூலகர்தா அஸ்ட்ரோஸினெகா பூனா கம்பனியின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. காரணம் உலக அளவில் ஊசி ஏற்றுமதி செய்ய நிர்ணயித்த இலக்கை பூனா நிறுவனம் எட்டவில்லை. அந்த நிறுவனம் கடும் நெருக்கடியில் உள்ளது. இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ பலே அரசியல் விமரிசையாக நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X