பொது செய்தி

இந்தியா

பொதுக்கூட்டங்களுக்கு தடை?; தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி; 'கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கவும் தயங்கமாட்டோம்' என, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம், நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரசால்

புதுடில்லி; 'கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கவும் தயங்கமாட்டோம்' என, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம், நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தேர்தலுக்காக நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களில், சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பது, எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோர், முக கவசம் அணியாமல், உலா வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதன் வாயிலாக, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், அந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் மக்களும், வைரசால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.


latest tamil news


எனவே, பாதுகாப்பு நலனை கருத்தில் வைத்து, அனைவரும் முறையாக வழிமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டும். விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், பொதுக்கூட்டங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் பேரணிகளுக்கு தடை விதிக்க, தேர்தல் ஆணையம் தயங்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
11-ஏப்-202118:30:32 IST Report Abuse
Anantharaman Srinivasan ஒருவரிடமிருந்து 4 பேருக்கு வைரஸ் பரவும் நிலையில் உட்கார்ந்த இடத்திலிருந்து ஏட்டளவில் எழுதிவைத்தால் போதாது. மாற்றாந்தாய் மனப்பான்மை கொள்ளாது அனைத்து கட்சியையும் நடத்தவேண்டும். இன்றயநிலையில் தனிமனிதனே அரசின் சுயகட்டுப்பாடு இடைவெளி முககவசம் இன்றி திரிகிறான். கட்சி கூட்டத்தில் எப்படி இடைவெளியை கடைபிடிக்க முடியும். தேர்தல் அணையம் ஏட்டில் எழுதிவைத்தால் தங்கள் கடமை தீர்ந்தது என்று செயல்படுகிறது. இவர்களின் மேம்போக்கான செயலுக்கு முடிவு எப்படி??
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
11-ஏப்-202117:28:46 IST Report Abuse
திராவிஷ கிருமி இதுவே லேட்டு... இன்னமும் உதார் விட்டுகிட்டு...
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
11-ஏப்-202116:12:35 IST Report Abuse
Naresh Giridhar கொரோனா பிடியில் நாடு இருக்கும் நிலையில் , முதலில் தேர்தல் முக்கியம் தானா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X