பொதுக்கூட்டங்களுக்கு தடை?; தேர்தல் ஆணையம் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொதுக்கூட்டங்களுக்கு தடை?; தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (13)
Share
புதுடில்லி; 'கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கவும் தயங்கமாட்டோம்' என, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம், நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரசால்

புதுடில்லி; 'கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கவும் தயங்கமாட்டோம்' என, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம், நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தேர்தலுக்காக நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களில், சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பது, எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோர், முக கவசம் அணியாமல், உலா வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதன் வாயிலாக, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், அந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் மக்களும், வைரசால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.


latest tamil news


எனவே, பாதுகாப்பு நலனை கருத்தில் வைத்து, அனைவரும் முறையாக வழிமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டும். விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், பொதுக்கூட்டங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் பேரணிகளுக்கு தடை விதிக்க, தேர்தல் ஆணையம் தயங்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X