கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள்; உயர்நீதிமன்றம் நம்பிக்கை

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (76)
Share
Advertisement
மதுரை: கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக் கோரியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது. மதமாற்ற தடைச் சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி, சட்டத்தை அரசுத் தரப்பில் அமல்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தது.ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில்,
Religion, Madurai, HC, மதமாற்றம், உயர்நீதிமன்றம்

மதுரை: கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக் கோரியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது. மதமாற்ற தடைச் சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி, சட்டத்தை அரசுத் தரப்பில் அமல்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தது.

ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில், கிறிஸ்தவர்கள் ஈடுபடுகின்றனர். ஏழை ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற பல யுக்திகளை கையாள்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சில சமூக விரோத சக்திகள் போராடின. இதனால் அம்மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டன. இதற்கு வெளிநாட்டு நிதியுதவி பெறும் சில கிறிஸ்தவ அமைப்புகள் உதவின. இது மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தெரிந்தும் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி பாதிக்கும் எனக்கருதி அமைதி காக்கின்றன.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை சில கிறிஸ்தவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் துாண்டின. துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் பலியாகினர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் உதவிகள் செய்வதுபோல் கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சில கிறிஸ்தவ அமைப்புகள், சமூக விரோத சக்திகள் அரசுக்கு எதிராக மக்களை துாண்டின. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. அங்கு கிறிஸ்தவ பிஷப்களின் கைகளில் அதிகாரம் குவித்துள்ளது. அங்கு எந்த ஒரு கிராமத்திலும், பிஷப்பின் அனுமதியின்றி அரசு அதிகாரிகள் நுழைய முடியாது.


latest tamil news


தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மற்றும் அவற்றின் சொத்துக்களை நிர்வகிக்க அறநிலையத்துறை உள்ளது. ஆண்டுதோறும் சொத்துக்கள் தணிக்கை செய்யப் படுகின்றன.வக்பு சொத்துக்களை பாதுகாக்க, நிர்வகிக்க வக்பு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மிஷினரிகள், சர்ச்சுகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் வருவதில்லை. அரசால் தணிக்கை செய்யப்படுவதில்லை. தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதி உதவி பெறுகின்றனர். இதை அரசு முறையாக கண்காணிப்பதில்லை.

கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, 'ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு கட்டாயப்படுத்தியோ அல்லது ஆசைவார்த்தை கூறியோ மதமாற்றம் செய்வதை 2002ல் கொண்டுவரப்பட்ட சட்டம் தடுக்கிறது,' எனக்கூறி அதற்குரிய நகலை தாக்கல் செய்தது. இச்சட்டத்திற்கான தகுந்த விதிமுறைகளை உருவாக்கி, அதன் அடிப்படை நோக்கம், உள்ளடக்கத்தின்படி சட்டத்தை அரசுத் தரப்பில் அமல்படுத்துவார்கள் என இந்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவிக்கிறது. புகார்கள் எதுவும் வரும்பட்சத்தில் மாவட்ட மாஜிஸ்திரேட் சட்டத்திற்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். மனுதாரர் கோரும் நிவாரணத்தை இந்நீதிமன்றம் வழங்க முடியாது. இது அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டது. மனுவை பைசல் செய்கிறோம் என்றனர் நீதிபதிகள்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
11-ஏப்-202122:12:39 IST Report Abuse
Gnanam பைபிளை மேற்கோள்காட்டி மக்களின் மத நம்பிக்கையை மாற்றிவிடுகிறார்கள். இத்தனைக்கும் பைபிளில் இந்தியாவை பற்றியோ, இந்தியர்களை பற்றியோ ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை. அன்று திட்டமிட்டு கல்வி புகட்டுவதுபோலவும், உதவி செய்வதுபோலவும், கிறிஸ்தவ மதத்தை பரப்பவே வந்தார்கள்.அது பழைய கதை. இன்று அவர்களுக்குள்ளாகவே பற்பல பிரிவினைகள். எங்கே சென்றால் நிம்மதி கிடைக்கும் என்று மக்கள் அலைமோதுகிறார்கள். ஒருநாள் எப்படியும் பழையபடி முன்னோர்கள் கடைபிடித்த வழிமுறைகள்தான் நல்லவை என்று திரும்பி வருவார்கள் பாரம்பரிய கலாச்சாரத்திற்கு. பச்சிளம் குழந்தைகள் ஒன்றுமறியாத பருவத்தில் மத சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. மனம் பக்குவமடைந்தபின் தானாக சிந்தித்து பழைய நிலைக்கு திரும்புவது உறுதி. பொறுத்திருக்கவேண்டும்.
Rate this:
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
11-ஏப்-202120:00:55 IST Report Abuse
R.Subramanian மத மாற்றங்களில் பின்னால் இருக்கும் ஆபத்துகளை பற்றி பலரும் புரிந்துகொள்வதில்லை. முதலில் மத மாற்ற செயல்களுக்காக உலகம் முழுவதும் நடத்த அழிவுகளை பற்றி தேடி படித்து பாருங்கள்.
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
11-ஏப்-202117:17:28 IST Report Abuse
சோணகிரி முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறித்தவர்கள் இந்து மதத்தின் பெருமையை உணர்ந்து ஹிந்து மதத்திற்கு மாறி வருகின்றனர்... இங்கே உள்ள ஹிந்துக்கள் ரொட்டித்துண்டுக்கும் மிஷநரி தரும் பிச்சைக்காசுக்காகவும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர்...
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
11-ஏப்-202119:08:50 IST Report Abuse
தமிழன்ரொட்டி துண்டுக்கு கூட வலி இல்லேன்னா நீங்க இன்னும் அந்த மக்களை எந்த அளவிற்கு வைத்திருக்கிறீர்கள் என்று தெரியுது... யாருக்கு எந்த மதம் பிடிக்குதோ தாராளமாக மாறிக்கொள்ளலாம் .. இது சுதந்திர இந்தியா ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X