பொது செய்தி

தமிழ்நாடு

சாதிக்கப்போவது மனமா, பணமா ? சளைக்காமல் நடந்த பட்டுவாடா

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
திருப்பூர்: சட்டசபை தேர்தலில், வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்வது, கட்சியினர் தந்த பணமா, வாக்காளர்களின் மனமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஓட்டுப்பதிவு முடியும் நேரம் வரை நடந்த பண பட்டுவாடாவும், இதை சலிப்போ, தயக்கமோ இன்றி பெற்ற வாக்காளர்களும் நெருட வைக்கின்றனர்.சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவுற்ற ஏப்., 4ம் தேதிக்கு முன்பிருந்தே, திருப்பூர் மாவட்டத்தில்,
பணப்பட்டுவாடா, பணம், தேர்தல், திருப்பூர், வாக்காளர்கள்,

திருப்பூர்: சட்டசபை தேர்தலில், வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்வது, கட்சியினர் தந்த பணமா, வாக்காளர்களின் மனமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஓட்டுப்பதிவு முடியும் நேரம் வரை நடந்த பண பட்டுவாடாவும், இதை சலிப்போ, தயக்கமோ இன்றி பெற்ற வாக்காளர்களும் நெருட வைக்கின்றனர்.

சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவுற்ற ஏப்., 4ம் தேதிக்கு முன்பிருந்தே, திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பண வினியோகம் துவங்கி விட்டது. மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், அனைத்திலுமே, பண பட்டுவாடா என்பது நீக்கமற நிறைந்திருந்தது. ஓட்டுப்பதிவு தினத்தன்று, மதியம் வரை கூட பண பட்டுவாடா தொடர்ந்தது. துவக்கத்தில், இந்த முறை, பண வினியோகம் இல்லை என்பது போன்ற தோற்றத்தை, வேட்பாளர்களும், கட்சியினரும் ஏற்படுத்தியிருந்தனர். பணத்தை எதிர்பார்த்திருந்த வாக்காளர்கள் பலர், இதனால், ஆர்வம் குன்றி போயிருந்தனர்.தேர்தல் அறிவிப்புக்கு முன்பு, வேட்டி, சேலை, பரிசுப்பொருட்கள் என்ற வடிவத்தில், பிரதான அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு 'தீனி' போட்டன. ஒரு சில வாக்காளர்களை தவிர, பெரும்பாலானோர் இதை ஏற்றுக்கொண்டனர்.


துவங்கிய பட்டுவாடா


கடந்த ஏப்., 2 முதல் சன்னமாக துவங்கிய பண வினியோகம், அடுத்தடுத்த தேதிகளில் வேகம் பெற்றது. பண வினியோகத்திற்கான திட்டமிடல் என்பது, தேர்தலுக்கு பல நாட்கள் முன்பே, கட்சியினர் திட்டமிட்டது என்பது தெளிவாக தெரியவந்தது. மாவட்டத்தில், பறக்கும் படையினரால், பணம் மற்றும் பொருட்கள் சிக்கின. ஆனால், இதில், பெரும்பாலானவை, வியாபாரிகள் உட்பட அரசியல் கட்சி தொடர்புடையவர்கள் அல்ல; ஏற்கனவே, அந்தந்த ஊர் மற்றும் வார்டுகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கு பணம் வழங்கப்பட்டிருக்கிறது.இதை மகளிர் குழுவினர் அல்லது நண்பர், பக்கத்து வீட்டினர் என்ற போர்வையில், வாக்காளர்களுக்கு வழங்குவது என்பதே, வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் திட்டம்.மாவட்டத்தில், ஒரு சில புகார்களை தவிர, வேறு எந்தப் புகார்களும் இன்றி, பண வினியோகத்தை கமுக்கமாக கட்சியினர் நிறைவு செய்தனர் என்பதுதான் நிஜம்.


latest tamil news



200 முதல்ஆயிரம் ரூபாய் வரை


போட்டியின் தன்மை, ஊர் நிலவரம், வாக்காளரின் தன்மையை பொறுத்து, ஒரு ஓட்டுக்கு 200 ரூபாய் முதல் ஆயிரம் வரை, பணம் நிர்ணயிக்கப்பட்டது.சில வாக்காளர்கள் பேரம் பேசி, கொடுத்த தொகையை விட அதிகமாக பெற்றிருக்கின்றனர். அதிகம் கொடுக்க முடியவில்லை என்று வெளிப்படையாக சொல்ல முடியாத கட்சியினர், 'இந்த முறை இதை வச்சுக்குங்க; அண்ணன் ஜெயிச்சுட்டார்னா கூடுதலாக வாங்கித் தர்றோம்' என்று 'நப்பாசை' காட்டினர். 'பணத்தை பெற்றுக்கொண்டாலும், நம்பகமாக, எங்களுக்குத் தான் ஓட்டுப்போட்டார்கள் என்பதை நம்பும் வகையில், வாக்காளர்களிடம் எதையும் ஆதாரமாக பெற முடியவில்லையே' என்ற ஏக்கம், கட்சியினரிடம் இருக்கிறது. வாக்காளர்கள் இரு வேட்பாளர்களிடமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, யார் அதிகம் கொடுத்தாரோ, அவருக்கு ஓட்டளிப்பது அல்லது 'மனசாட்சி'(?) யாருக்கு ஓட்டளிக்க சொல்கிறதோ அவர்களுக்கு ஓட்டளிப்பது என்று இரண்டு வகைகளை கையாண்டார்கள். சொல்லப்போனால், பணம் கொடுத்தாலும், ஓட்டு தங்களுக்கு தான் என்ற உத்தரவாதம் இல்லை என்பதுதான் கட்சியினரின் கவலை.


புகார் வந்தால்தானே...


'பண வினியோகம் குறித்து தேர்தல் கமிஷன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என்ற கேள்வி, திருப்பூர் மாவட்ட வாக்காளர்கள் பலரிடம் உள்ளது.ஆனால், 'எந்தப் புகாரும் வாக்காளரிடம் இருந்தோ, கட்சியினரிடம் இருந்தோ இல்லாதபோது, எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?' என்று கேள்வி எழுப்புகிறார், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள்.பண வினியோகம் குறித்து வாக்காளர்களுக்கு பல கவலைகள்; அவை விசித்திரமாகவும் இருந்தன.'குறைந்த தொகை தான் கொடுத்திருக்காங்க... ரெண்டாயிரம் ரூபாய் வரைக்கும் ஒரு ஓட்டுக்கு கிடைக்கும்னு நெனச்சோம்... குறைச்சிட்டாங்க, ரொம்பவே''பக்கத்து வீட்டுக்காரருக்கு தேடி வந்து கொடுத்துட்டு போறாங்க பணத்தை... எங்க வீட்ல, நாலு ஓட்டு இருக்கு...


இன்னும் பணம் வரலையே


''எங்களுக்கு 200 ரூபாதான் ஒரு ஓட்டுக்கு கொடுத்தாங்க; அந்தாளுக்கு ஐநுாறு ரூபா கொடுத்திருக்காங்க; ஒரு நியாயம் வேணாமா' இப்படிப்பட்ட ஆதங்கங்களும், வாக்காளர்களிடம் இருந்தன. தேர்தல் வெற்றியாளர், பணத்தால் சாதித்தவரா, மக்கள் மனதால் சாதித்தவரா என்று, தேர்தல் முடிவு வரும்போது கேட்டால், விடையளிப்பது கஷ்டம்தான்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-ஏப்-202119:08:14 IST Report Abuse
மலரின் மகள் அரசு அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் தபால் ஒட்டு போடுவதற்கு கூட பணம் கொடுத்ததாக மலரில் செய்தி வந்து அதையும் வாசகர்களாகிய நாம் எதிர்த்தோம். நாடு போகின்ற பிக்கை பார்த்தல் தேர்தல் அதிகாரிகள் கூட பணம் பெற்று கொண்டு ஒட்டு போடும் நிலைக்கு காட்சிகள் கீழிறக்கம் செய்துவிடும் நமது ஜனநாயகத்தை. இதற்கு மூல காரணம் தோன்றியது தேர்தலில் நேரடியாக மக்கள் வாக்குகளை பெறாமல் ராஜ்யசபா எம்பி முறைகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு பதவி பெரும் முறையை கொணர்ந்ததாக இருக்கவேண்டும். விஜய் மல்லையா போன்றோரெல்லாம் எதாவது ஒரு கட்சியினர் மூலம் ராஜ்ய சபாவிற்குள் நுழைந்து விடுவது சரிதானா. டிப்ளமேடிக் பாஸ்போர்ட் கிடைக்கும் வெளிநாடுகளுக்கு சென்றுவருவதில் சலுகைகள் சவுகரியங்கள் கிடைக்கும் என்பதற்காக அவர்கள் எம்பிகளாகி விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். நாம் எதை கண்டோம். ஏதுமறியாமலேயே இருந்து விடுகிறோம்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
11-ஏப்-202115:34:20 IST Report Abuse
Baskar இது போன்ற மக்களை வைத்து கொண்டு எப்படி லஞ்சம் இல்லாமல் வோட்டு வாங்குவது. தமிழக மக்கள் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் பொது நான் இங்கு வந்து நாற்பது வருடமாகிறது இதுவரை ஒரு பைசா கூட வாங்கியது இல்லை என்கிறது. இன்னொன்று சாத்தியமே செய்கிறது.சில உட்தமிகள் இந்த இலவசத்திற்கு எல்லாம் நாங்கள் அடிமை இல்லை என்று சொல்லி விட்டு வரிசையில் முதல் ஆளாக நிற்கும். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள். அது போல் தான் இப்போது தமிழகத்துக்கு மக்கள்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஏப்-202115:18:18 IST Report Abuse
S.Baliah Seer சும்மா கிடந்த எட்டப்பாடிக்கு பதவி ருசியைக் காண்பித்தவர் சசிகலா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X