ஊரடங்கில் எனக்கு உடன்பாடில்லை: கெஜ்ரிவால்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: ஊரடங்கில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், படுக்கைகள் பற்றாக்குறையால் வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.டில்லியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா
ArvindKejriwal, Delhi, Lockdown, AAP, அரவிந்த் கெஜ்ரிவால், ஊரடங்கு, டில்லி

புதுடில்லி: ஊரடங்கில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், படுக்கைகள் பற்றாக்குறையால் வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

டில்லியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்புகளை நீக்குவது குறித்து நான் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக வீடு வீடாக பிரசாரம் செய்ய டில்லி அரசு தயாராக உள்ளது.


latest tamil newsடில்லியில் 65 சதவீத நோயாளிகள் 35 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு, அங்கு படுக்கைகள் உள்ளனவா என நமது செயலியில் பார்த்து செல்லுங்கள். அவசரநிலையாக இருந்தால் மட்டுமே படுக்கைகளில் நோயாளிகளை சேர்க்கவும். ஊரடங்கில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், படுக்கைகள் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் தோல்வி ஆகியவையால் ஊரடங்கு தேவைப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridharan - chennai,இந்தியா
12-ஏப்-202110:40:50 IST Report Abuse
sridharan மருத்துவமனை நிர்வாகத்தின் தோல்விக்கு யார் காரணம், மாநில அரசுதான்
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
11-ஏப்-202119:12:15 IST Report Abuse
sundarsvpr இறைவனால் யுத்தகளத்தில் கண்ணன் இருந்தும் அழிவை தவிர்க்க இயலவில்லை. வினை பயன்களை அறுவடைசெய்துதான் ஆகவேண்டும். எந்த தவறுதலுக்கும் மன்னிப்பு உண்டு. அதுதான் கொரநா பருவுதலில் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள். அரசுக்கு மட்டுமல்ல. பொதுமக்களுக்கும் உண்டு. குறிப்பாய் அரசியல் கட்சிகளுக்கு. எதிர்ப்பு இருந்தால் போட்டி உண்டு. கொரானாவுடன் போராடமுடியாது. ஒதுங்கிச்செல்லவேண்டும் அதுதான் முக கவசம் இடைவெளி உடல் யுத்தம் அதாவது கைகளை சுத்தம் செய்தல் உடை சுத்தத்தை பற்றி எவரும் பேசுவதில்லை. வெளியில் சென்றுவிட்டுவந்தால் உடைகளை கசக்கி உலர்த்தவேண்டும் ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கும் என்பதை மக்கள் கவனித்தல் கொள்ளவேண்டும். பாதுகாப்புடன் நம் பணிகளை செய்திடல் என்பதனை கவனம் செலுத்தி கொரானாய்வை வெல்லமுடியும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
11-ஏப்-202116:04:08 IST Report Abuse
vbs manian ஊரடங்கு இல்லையென்றால் தொற்று பெருகும். பிரச்சினைகள் வரும். அப்போதுதானே மோடியை நன்கு திட்டலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X