பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி திருவிழா துவங்கியது: மக்களுக்கு பிரதமரின் 4 வேண்டுகோள்கள்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், கொரோனா தடுப்பூசி திருவிழா துவங்கியது. பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர்.அதேநேரத்தில், பொது மக்களுக்கு பிரதமர் மோடி 4 வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிரதமர் அறிவுரைப்படி இன்று(ஏப்.,11) முதல் ஏப்., 14 வரை 4 நாட்கள் தடுப்பூசி திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை
 தடுப்பூசி திருவிழா, பிரதமர்,  வேண்டுகோள்கள்

புதுடில்லி: நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், கொரோனா தடுப்பூசி திருவிழா துவங்கியது. பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர்.
அதேநேரத்தில், பொது மக்களுக்கு பிரதமர் மோடி 4 வேண்டுகோள் விடுத்துள்ளார்.


latest tamil news


பிரதமர் அறிவுரைப்படி இன்று(ஏப்.,11) முதல் ஏப்., 14 வரை 4 நாட்கள் தடுப்பூசி திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் தகுதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்து இருந்தார். மருத்துவமனைகள், தடுப்பூசி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


latest tamil newsஇதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர்.


வேண்டுகோள்


latest tamil news


தடுப்பூசி திருவிழா தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், நாம் இன்று தடுப்பூசி திருவிழாவை துவங்குகிறோம். இதன் காரணமாக, நாட்டு மக்களுக்கு நான்கு விஷயங்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறேன்.
*தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்.
* கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுங்கள்,
*முக கவசங்கள் அணியுங்கள் மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.
* தொற்று கண்டறியப்பட்ட பகுதியை நுண் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றுங்கள் என தெரிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202108:38:46 IST Report Abuse
ஆப்பு திருவிழாவாம்.... திருவிழா....தடுப்பூசி... திருவிழா...கொரோனாவை... பரப்புனவங்க....கொண்டாடும்... திருவிழா...எல்லோரும்... வாங்க...தடுப்பூசி... எடுங்க...
Rate this:
Cancel
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
12-ஏப்-202102:52:24 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan பொருத்தமான சரியான வேண்டுகோள்களாக இருக்கும். பகிரலாம் எனப் பார்த்தால் தொடர்பில்லாமல் உளறிஇருக்கிறாரே தேர்தல் முடிவுகள் அவரைக் கலக்கிவிட்டனவோ? முதலில் தடுப்பூசி வரம்பிற்குள் வருபவர்கள் அனைவரும் அஞ்சாமல் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இருக்க வேண்டாமா? உங்கள் குடும்பத்திலும் உறவு வட்டத்திலும் நட்பு வட்டத்திலும் தகுதி உடையவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள். இவைபோல் தடுப்பூசி தொர்பாக ஒன்றும் சொல்லவில்லையே. தடுப்பூசித்திருவிழா என்பதை மறந்து விட்டாரோ அன்புடன் இலக்குவனார்_திருவள்ளுவன், தமிழே_விழிதமிழா_ விழி எழுத்தைக்_காப்போம் மொழியைக்காப்போம் இனத்தைக்காப்போம்
Rate this:
Cancel
Ram Kannan - California,யூ.எஸ்.ஏ
11-ஏப்-202117:57:24 IST Report Abuse
Ram Kannan Be Happy 2nd Chance to collect more fund for PM care
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X