பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் மழை பெய்யும்.
Tamilnadu, Rain, Weather, தமிழகம், மழை, வானிலை

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் 1.5 முதல் 2.1 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.


latest tamil news


ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X