பொது செய்தி

இந்தியா

அனில் தேஷ்முகின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு சிபிஐ சம்மன்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை: மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முகின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி ‛மாமூல்' வசூலிக்குமாறு போலீஸ்
CorruptionCase, CBI, Deshmukh, PersonalAssistants, ஊழல், சிபிஐ, தேஷ்முக், உதவியாளர்கள், சம்மன்

மும்பை: மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முகின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி ‛மாமூல்' வசூலிக்குமாறு போலீஸ் அதிகாரிகளிடம் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் குற்றம்சாட்டினார். அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து, 15 நாள்களுக்குள் முதல்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news


நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், சிபிஐ பதிவு செய்த முதற்கட்ட விசாரணை தொடர்பாக அனில் தேஷ்முகின் தனிப்பட்ட உதவியாளர்கள் சஞ்சீவ் பலண்டே மற்றும் குண்டன் ஆகிய இரு உதவியாளர்களும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரு உதவியாளர்களும் சிபிஐ குழு முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஏப்-202107:23:29 IST Report Abuse
 Muruga Vel குந்தன் என்கிற பெயரை குண்டன் ஆக்கிவிட்டீர்களே ..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஏப்-202115:58:46 IST Report Abuse
Lion Drsekar தேவையற்ற விசாரணைக்கு பதிலாக எல்லோருக்குமே உண்மை கண்டறியும் சோதனை பயன்படுத்தினால் சாட்சி, பொய்சாட்சி, எந்த ஒன்றுமே தேவைப்படாது மேலும் எல்லா உண்மைகளும் வெளிவரும் ? வந்தே மாதரம்
Rate this:
234 லட்சியம் 200 தோல்வி நிச்சயம், DMK தோல்விக்கு பாடுபடுவோம், சென்னை.அவர்கள் எல்லோரும் அதற்கே சவால் விடுவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X