பொது செய்தி

இந்தியா

விரைவில் 5 தடுப்பூசிகள்! மத்திய அரசு தகவல்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அக்., மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள்
INDIA, CORONA, CORONAVIRUS, VACCINE, COVID19, COVISHIELD, COVAXIN, Novavax, Johnson & Johnson, Sputnik V, Intranasal, Zydus Cadila, இந்தியா, தடுப்பூசி,தடுப்பு மருந்து, கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, ஜான்சன், நோவாக்ஸ்,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அக்., மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. தற்போது, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில், தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன. இதனையடுத்து, தடுப்பு மருந்து உற்பத்தியை விரைவுபடுத்தும்படி மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில், இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளநிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் கிடைத்து விடும். ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி, நோவாக்ஸ் தடுப்பூசி, ஜைடஸ் காடில்லா தடுப்பூசி, இன்ட்ராநாசல் தடுப்பூசி ஆகியவை கிடைத்து விடும். அவசர காலத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்னர், தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவை குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டு உள்ளது.


latest tamil news


ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை, அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு அனுமதிப்பதற்கான உத்தரவு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறைகள் சரியாக இருக்கும்பட்சத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசி ஜூனிலும், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஆகஸ்டிலும், காடிலா ஜைடஸ் தடுப்பூசி ஆகஸ்ட்டிலும், நோவாக்ஸ் தடுப்பூசி செப்டம்பரிலும், நாசல் தடுப்பூசி அக்டோபரிலும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் எதையும் நிறுத்தாமல் மருந்து தயாரிக்கும் பணியை விரைவுபடுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்தியா தொடர்ந்து உலகின் தடுப்பு மருந்து மையமாக திகழ்வதற்கும், உலகின் சிறந்த மருந்துகள் இந்தியர்களுக்கு கிடைப்பதற்கும் உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களை இந்தியாவிற்கு வர வேண்டும் என அரசு அழைக்கிறது. அவர்களுக்கு தேவையான உதவி, நிதி ஆதாரம் மற்றும் பரிசோதனை செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202104:47:52 IST Report Abuse
ஆப்பு எல்லா தடுப்பூசிகளிலும் ரெண்டு டோஸ் போட்டுருங்க. உலகத்தில் எந்த மூலையிலிருந்து எந்த மாறுபட்ட கொரோனா வந்தாலும் எதிப்பு சக்தி வரணும்.
Rate this:
Cancel
11-ஏப்-202121:09:16 IST Report Abuse
சேகர்    ஈரோடு தடுப்பூசி போடுவது நல்ல விஷயம் தான் அதைவிட முக்கியம் தடுப்பூசி போடூவதால் உண்டான அனைத்து பக்க விளைவுகளையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
11-ஏப்-202118:10:13 IST Report Abuse
PANDA PANDI கேட்பதற்கு நலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X