மியான்மரில் ராணுவம் வெறியாட்டம்: ஒரே நாளில் 82 பேர் படுகொலை

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
நேபிடாவ்: மியான்மர் அரசை ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடிய 82 பேரை ஒரே நாளில் கொன்று குவித்து புதைத்திருக்கிறது அந்நாட்டு ராணுவம்.மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. ஆங் சான் சூச்சி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியதாக கூறிய ராணுவம் அவரை கைது செய்தது. பிப்., முதல் நாட்டை தன்
மியான்மர், ராணுவம், வெறியாட்டம், ஜனநாயகவாதிகள், சுட்டுக்கொலை,

நேபிடாவ்: மியான்மர் அரசை ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடிய 82 பேரை ஒரே நாளில் கொன்று குவித்து புதைத்திருக்கிறது அந்நாட்டு ராணுவம்.

மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. ஆங் சான் சூச்சி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியதாக கூறிய ராணுவம் அவரை கைது செய்தது. பிப்., முதல் நாட்டை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தது ராணுவம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக முறையிலான அரசே ஆள வேண்டும் எனவும் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை கொத்து கொத்தாக சுட்டு வீழ்த்தி ராணுவம் வெறியாட்டம் ஆடி வருகிறது.


latest tamil news


மியான்மர் ராணுவத்தின் இச்செயலுக்கு ஐ.நா., அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மியான்மருக்கான ஐ.நா., சிறப்பு தூதர் கிறிஸ்டைன் நெருக்கடியை தீர்ப்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு வெள்ளியன்று வந்தார். பல தென்கிழக்கு ஆசிய நாடுகளின் யோசனைகளுக்கு அவர் குரல் கொடுக்க விரும்புகிறார். ஆனால் அவரை மியான்மருக்குள் அனுமதிக்க முடியாது என ராணுவம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் வெள்ளியன்று பாகோ என்ற நகரத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது ராணுவப் படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 82 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசியல் கைதிகளுக்கான உதவும் அமைப்பு கூறியுள்ளது. இந்த அமைப்பு தினசரி கைதுகள் மற்றும் மரணங்களை பதிவு செய்கிறது. உறுதிசெய்யப்பட்ட பின்னரே இவர்கள் எண்ணிக்கையை பதிவிடுவதால் இவர்களது தகவல்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


latest tamil news


யாங்கோன் நகரத்தில் மார்ச் 14 போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தற்போது பாகோவில் 82 பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களது உடல்களை சேகரித்து நகரிலுள்ள புத்த கோயிலின் மைதானத்தில் புதைத்திருப்பதாக உள்ளூர் மீடியா கூறியுள்ளது. பிப்.,யில் ராணுவ ஆட்சி அமைந்த பிறகு 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வரிசெலுத்தும் மூடன் எங்க தமிழ்நாட்டுல கூட தான் அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் கைகோர்த்து, தங்கள் அதிகார பசியை போக்க, கட்டுக்குள் இருந்த கொரோனா பரவலை, கட்டுக்கடங்காமல் பரவ விட்டு, பல உயிர்களை பலி கொடுத்து கொண்டிருக்கிறார்கள். சாமனிய மக்களால் என்ன செய்ய முடியும்?
Rate this:
sivan - seyyur,இந்தியா
11-ஏப்-202122:09:59 IST Report Abuse
sivan நல்ல பெயரைத்தான் உங்களுக்கு தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் உங்கள் கருத்தால் அதை மறுபடியும் நிரூபிக்கிறீர்கள்...
Rate this:
Cancel
Venkat - Chennai,இந்தியா
11-ஏப்-202120:07:27 IST Report Abuse
Venkat சீனாகரான ஒன்னும் பண்ண முடியாது அவங்க தான் மியான்மார் மிலிடரயோட முதலாளி
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
11-ஏப்-202119:47:54 IST Report Abuse
Ramesh Sargam ஐக்கிய நாடுகள் அவை, உடனே தலையிட்டு, மியான்மர் ராணுவத்திற்கு சரியான பாடம் புகற்றவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X