செவ்வாய் கிரகத்தில் சிறிய ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா..!

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரி என்கிற அமைப்பு முன்னதாக பேர்சேவேரன்ஸ் என்கிற சிறிய ரக ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் முன்னதாக இணையத்தில் வைரலாகி
செவ்வாய் கிரகம், ஹெலிகாப்டர், நாசா

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரி என்கிற அமைப்பு முன்னதாக பேர்சேவேரன்ஸ் என்கிற சிறிய ரக ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் முன்னதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சிறிய விமானம் ஒன்றை பறக்கவிட நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். இன்னும் மூன்று, நான்கு நாட்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வெறும் 40 வினாடிகள் செவ்வாய் கிரகத்தின் பரப்பிலிருந்து சிறிது உயரத்துக்கு இந்த ஹெலிகாப்டர் பறக்க உள்ளது.


latest tamil news
இதன் புகைப்படங்களை பர்சிவியரன்ஸ் ரோவர் வெளியிடும். இதற்காகவே இந்த ரோவரில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.விமானத்தை முதன்முதலில் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் இதுபோலவே பரிசோதனை முயற்சியாக பூமியின் தரையிலிருந்து தாங்கள் வடிவமைத்த சிறிய விமானத்தை பறக்க விட்டனர். தற்போது செவ்வாய் கிரக பரப்பிலிருந்து சிறிய ஹெலிகாப்டரை பறக்க விடுவது ரைட் சகோதரர்களைப் போன்று தங்களுக்கும் சவாலான விஷயம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் அட ஆக்கங்கெட்டவர்களே! செவ்வாயில் காற்றே இல்லையே! எலிகாப்டர் எப்படி பறக்கும்?? ஆண்டவன் படைத்த அற்புத உலகத்தை நாசம் செய்ய வந்ததிந்த நாசா!!!
Rate this:
shekar shekar - Tirupur,இந்தியா
12-ஏப்-202115:14:13 IST Report Abuse
shekar shekarபடித்து சிந்தித்தால் மடமை அகலும்னு, நீங்க அடிக்கடி சொல்வீர்களே அண்ணா......
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
11-ஏப்-202121:19:37 IST Report Abuse
Ramesh Sargam நாஸாவிட்கு வாழ்த்துக்கள். (Just for joke: அடுத்தமுறை எங்கள் நாட்டு அரசியல் கட்சிகளை அணுகுங்கள். அவர்கள் கட்சி கொடிகளை கொடுப்பார்கள் அங்கே பறக்கவிடுவதற்காக)
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஏப்-202121:18:12 IST Report Abuse
முக்கண் மைந்தன் நாங்கெ கோவிலு கோவிலா கெட்டுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X